மக்கள் எதிர்நோக்கியுள்ள நீர் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வேன் - அமைச்சர் ஹக்கீம்

னது 22 வருட பாராளுமன்ற வாழ்க்கையில் நான் எதிர்நோக்கிய நீர் தொடர்பான பிரச்சினைகள் ஏராளாமானவை. அவை அனைத்தையும் மலர்ந்துள்ள இந்த நல்லாட்சியில் எனக்கு வழங்கப்பட்டுள்ள நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் மூலம் செவ்வனே நிறைவேற்ற வேண்டும் என்ற அவா என்னுள் ஆழமாக பதிந்துள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

உலக நீர் தினத்தை முன்னிட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் 'நீர் மற்றும் தொழில்வாய்ப்பு - 2016' என்ற தொனிப்பொருளில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர், பொறியியலாளர் கே.ஏ.அன்சார் தலைமையில் செவ்வாய்க்கிழமை (22) காலை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அமைச்சர் ஹக்கீம் உரையாற்றும்போது மேலும் தெரிவித்தாவது,

2019 ஆம் ஆண்டளவில் உலகம் மிகமோசமான வரட்சியை எதிர்நோக்க நேரிடும் என்று எதிர்வு கூறப்படுகின்றது. கடந்த வாரத்தில் நாம் சந்தித்த எரிசக்தி பிரச்சினையின் மூலமும் அதனையூகித்து கொண்டோம். அதேபோன்று குடிநீர் தொடர்பில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கும் எதிர்வு கூற நாம் தயாராக வேண்டும்.

அண்மையில் களனி கங்கையில் எண்ணெய் கசிவு நீருடன் கலந்ததால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுசெய்ய 130 மில்லியன் ரூபாவை நாம் செலவிட நேர்ந்தது. எதிர்காலத்தில் அதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாத விதத்தில் எமது அபிவிருத்தி திட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பது அவசியமாகும்.

எனது 22 வருட பாராளுமன்ற வாழ்க்கையில் நான் எதிர்நோக்கிய நீர் தொடர்பான பிரச்சினைகள் ஏராளாமானவை. அவை அனைத்தையும் மலர்ந்துள்ள இந்த நல்லாட்சியில் எனக்கு வழங்கப்பட்டுள்ள நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் மூலம் செவ்வனே நிறைவேற்ற வேண்டும் என்ற அவா என்னுள் ஆழமாக பதிந்துள்ளது. மிகுந்த சிரத்தை எடுத்து எமது நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள குழாய் நீர் தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்வேன்.

தற்போது நாட்டில் 45 சதவீதமானவர்களுக்கு சீரானகுழாய் நீர் விநியோகம் வழங்கப்படுகின்றது. 2020ஆம் ஆண்டளவில் 60 சதவீதமானவர்களுக்கு குழாய் நீர் விநியோகத்திற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். மேலும், கிணற்றுநீர் பாவணை, மழைநீர் சுத்திகரிப்பு மற்றும் சேகரிப்பு போன்ற திட்டங்கள் உரிய கவனம் செலுத்தி வருகின்றோம். இதனால் நாட்டில் சகல பிரதேசத்தில் வாழும் மக்களுக்குரிய நீரை மிகவிரைவில் பெற்றுக்கொள்ளக் கூடியதாக அமையும் எனவும் தெரிவித்தார். 

இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் என்.டீ.ஹெட்டிஆராச்சி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொறியியலாளர் கருணாசேன ஹெட்டிஆராச்சி, ஜெய்க்கா பிரதிநிதி, யுனிசெப் அமைப்பின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி திருமதி உனாமெக்கோலி, வெளிநாட்டு தூதுவர்கள் அமைச்சின் அதிகாரிகள், மற்றும் சக ஊழியர்கள் உட்படபலரும் கலந்து கொண்டனர். 

இதேவேளை, தேசிய நீர் வழங்கல் சபையினால் அகில இலங்கை ரீதியில் பாடசாலை மட்டத்தில் 'நீர் மற்றும் தொழில்வாய்ப்புகளும் என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வும் நினைவு புத்தகவெளியீடொன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஊடகப் பிரிவு.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -