இந்தியா அணி வீரர்களின் தகமைகள் - இதோ

பொதுவாகவே விளையாட்டு துறைகளில் அதிக ஈடுபாடு கொண்டுள்ள மாணவர்கள் படிப்பில் கொஞ்சம் மந்தமாக தான் இருப்பார்கள். இதற்கு நமது இந்திய விளையாட்டு வீரர்கள் மட்டும் விதிவிலக்கு அல்ல. ஆனால், சில மாணவர்கள் அவர்கள் அப்பா, அம்மாவின் ஆசையையும் நிறைவேற்றிவிட்டு தங்களது ஆசையையும் பூர்த்தி செய்துக் கொள்வார்கள்.

வெளிநாடுகளில் அடிப்படை கல்வி முடிந்த பிறகு, அவரவர்களுக்கு பிடித்த துறை சார்ந்த கல்விகளிலும், விளையாட்டு மேல் பிரியம் கொண்டவர்கள் அதற்கேற்ற பயிற்சி நிறுவனங்களிலும் சேர்வது வழக்கம். ஆனால், நமது நாட்டில் அப்படி இல்லை. நமது இந்திய கிரிக்கெட் அணியில் மட்டும் தான் எம்.பி.ஏ முடித்தவர் முதல் காலேஜ் ட்ரோப் அவுட் ஆனவர் வரையிலான வீரர்கள் விளையாடியுள்ளனர்.

பெரும்பாலான வீரர்கள் பள்ளியை முடித்த கையோடு பேட்டை தூக்க ஆரம்பித்துவிட்டார்கள். பெரும்பாலும் நமக்கு சச்சின் மட்டும் தான் 10வது படித்து முடித்தவுடன் விளையாட வந்துவிட்டார் என தெரியும். ஆனால், நமது இந்திய கிரிக்கெட் அணியில் பெரும்பாலானோர் இப்படிப்பட்டவர்கள் தான். மற்றும் இவர்கள் எல்லாம் தான் இந்திய அணியின் தூண்களாக திகழ்கிறார்கள்….

ராகுல் டிராவிட்
இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் (The Wall of Indian Cricket) என்று புகழாரம் சூட்டப்பட்ட ராகுல் டிராவிட் பெங்களூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் எம்.பி.ஏ., படித்தவர். படிக்கும் போதே இவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துவிட்டது.

விராத் கோலி
தற்போதைய அணியின் தலை சிறந்த வீரராக திகழும் கோலி +2 மட்டுமே படித்தவர். +2 முடித்த கையேடு இந்திய அணிக்கு U19 உலக கோப்பை (2008) வாங்கிக் கொடுத்தவர் விராத் கோலி.

“தல” டோனி
ராஞ்சியில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார், அரைவாசிப் படிப்பில் இந்திய அணியில் காலடி எடுத்து வைத்தார் டோனி. பிறகு இவரது ஆசிரியர்கள் படிப்பை முடிக்கும் படி கேட்டுக் கொண்டனர்.

அணில் கும்ப்ளே
இப்போது வரையிலும் இவரை மிஞ்ச ஓர் இந்திய சுழற்பந்து வீச்சாளர் யாரும் வரவில்லை. இந்தியாவின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். இவர் ஆர். வி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்.

தவான்
இந்திய அணியின் தற்போதைய சிறந்த ஓபனிங் பேட்ஸ்மேன். 12 வயதிலே கிரிக்கெட் பயிற்சிகளில் ஈடுபட தொடங்கிய தவான் +2 படிப்போடு முழுமூச்சாக கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட தொடங்கிவிட்டார்.

சுரேஷ் ரெய்னா
பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் கலக்கும் சகலகலா வல்லவன் ரெய்னா. இவர் டெல்லி பல்கலைகழகத்தில் பி.காம் படித்தவர்.

ரோஹித் சர்மா
அடிச்சா டபிள் சென்சூரி இல்லாட்டி ஆடமாட்டேன் என்று அடம்பிடிக்கும் இந்திய வீரர். ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஸ்கோரான 264 ரன்கள் குவித்து சாதனை செய்தவர் சர்மா. இவர் +2 மட்டுமே முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்வின்
தற்போதைய தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர் என்பது இந்திய அணிக்கான பெருமை. அஸ்வின், சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் பயின்றவர்.

ஜவகல் ஸ்ரீநாத்
இந்தியாவின் நம்பகமான பந்து வீச்சாளராக திகழ்ந்தவர். இவர் மைசூர் எஸ்.ஜே.சி.ஈ பொறியியல் கல்லூரியில் இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி படித்தவர். படிப்பு, கிரிக்கெட் என இரண்டாலும் தூள் கிளப்பியவர் இவர்.






ரகானே
“குட்டி” ராகுல் டிராவிட் என புகழப்படும் ரகானே இன்றைய நம்பிக்கை நட்சத்திரம். டிராவிட் போலவே பொறுமை, நிதானம் மற்றும் சிறப்பாக ஆடக்கூடியவர். இவர் மும்பை பல்கலைகழகத்தில் பி.காம் முடித்தவர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -