கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழுக்களின் தலைவருமான ஆர்.எம்.அன்வரினால் இன்று 29.03.2016 ம் திகதி மாதாந்த கிழக்கு மாகாண சபை அமர்வின்போது குச்சவெளி பிரதேசத்திற்கான புதிய கல்வி வலையம் ஒன்றை பெற்றுத்தர கிழக்கு மாகாண சபையில் அவசர பிரேரணை முன் வைக்கபட்டது
குறித்த பிரேரணையில் குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட சுமார் 80ற்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளடக்கிய 12000 ற்கு மேற்பட்ட குடும்பங்களையும் 40000 ற்கு மேற்பட்ட சனத் தொகையையும் கொண்டுள்ள மூவின மக்களும் வாழுகின்ற ஒரு பிரதேசமாக காணப்படுகின்றது
எனினும் கல்வி சார்ந்த விடயங்களில் திருகோணமலை மாவட்டத்தின் ஏனைய வலயங்களை விட நிர்வாக விடயங்களிலும் குறிப்பாக ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பௌதீக வளத்தேவைகள் என்பன மிகவும் பின் தங்கிய நிலையிலே காணப்படுகின்றது எனவே எமது இக்பால் நகர் தொடக்கம் பதவி ஸ்ரீ புர வரையான எல்லைக்குட்பட்ட கிராமங்களில் 40 ற்கு மேற்பட்ட பாடசாலைகள் காணப்படுவதால் அவற்றை சிறப்பாக வழி நடாத்த இப்பிரடேசதிற்க்கான தனியான கல்வி வலயம் ஒன்றை பெற்றுத்தர ஆவணை செய்யுமாறு சபையை வேண்டி நிற்பதாக அவரால் பிரேரணை முன் வைக்கபட்டது
அதனை வழி மொழிந்த முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும் தற்போதைய மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமான்லெப்பை வழி மொழிந்தார் பின்னர் கௌரவ கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி குறித்த சபை அமர்விற்க்கு வராததன் காரணத்தால் குறித்த பிரேரணையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26 ம் திகதிய அமர்வின்போது பிரேரணையை சமர்ப்பித்து ஆரம்பிக்கும்படி கிழக்கு மாகாண சபை தவிசாளர் கலபதியினால் தள்ளி வைக்கபட்டது
குறித்த பகுதிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரி பாடசாலைகளை மூடி பெற்றார்கள் மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் போராட்டங்களை நடாத்தி வருவது குறிப்பட தக்கது
(மாகாண சபை உறுப்பினரின் )