உலகின் முதல் நிலை கிரிக்கட் வீரர் மற்றும் முதல்நிலை கிரிக்கட் அணியின் விபரம் இதோ...!

லகக்கிண்ண T20 கிரிக்கெட்டில் அபாரமான முறையில் விளையாடி தனது திறமைகளை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி, ICC துடுப்பாட்ட தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்திய அணியும் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.

விராட் கோலி நடப்பு ICC உலகக்கிண்ண T20 தொடரில் 4 போட்டிகளில் 184 ஓட்டங்களை 92 என்ற சராசரி விகிதத்தில் எடுத்துள்ளார் என்பதோடு அவரது ஸ்ட்ரைக் ரேட் 132க்கு சற்றுக்கூடுதல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகக்கிண்ண போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக அவுஸ்திரேலிய தொடக்க வீரர் ஏரோன் பிஞ்ச் இவரை விட 24 புள்ளிகள் அதிகம் பெற்றிருந்தார்.

ஆனால், தற்போது பிஞ்சைக் காட்டிலும் விராட் கோலி 68 புள்ளிகள் முன்னிலை பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

T20 பந்து வீச்சு தரவரிசையில் இந்தியாவின் அஸ்வினைப் பின்னுக்குத் தள்ளி மேற்கு இந்தியத் தீவுகளின் சாமுவேல் பத்ரி முதலிடம் பிடித்துள்ளார். அஸ்வின் 3 ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

எதிர்வரும் வியாழக்கிழமை, 3 ஆம் இடத்தில் உள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணியை இந்திய அணி மும்பையில் அரையிறுதிப் போட்டியில் சந்திக்கவுள்ளது.

நாளை (30) இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகள் முதல் அரையிறுதியில் டெல்லியில் மோதுகின்றன.

இந்த உலகக்கிண்ணத் தொடரில் தோல்வி கண்டிராத நியூஸிலாந்து தர வரிசையில் 6 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று 122 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -