மாயமான ஆசிரியையும் மாணவனும் கைது - இன்று இணையத்தளமொன்றில் வெளியான செய்தியொன்று

டந்த வருடம் மாணவனுடன் மாயமானதாக தேடப்பட்டு வந்த ஆசிரியை, குறித்த மாணவனுடன் திருப்பூரில் வைத்து பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்வபம் கடந்த ஆண்டு தென்காசியில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரகுமார்.

மத்திய பொலிஸ் படையில் பணியாற்றி வரும் இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுடைய 15 வயது மகன் தென்காசி ஈனாவிலக்கு பகுதியிலுள்ள ஒரு பாடசாலையில் கல்வி கற்று வந்தார்.

கடந்த வருடம் மார்ச் மாதம் 31 ஆம் திகதி பாடசாலைக்குச் சென்ற குறித்த மாணவன் மாலையில் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்த பெற்றோரின் புகாரின் பேரில் கடையநல்லூர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது மாயமான மாணவனும் அவனுடைய வகுப்பு ஆசிரியையான செங்கோட்டை காலாங்கரை பகுதியைச் சேர்ந்த கோதைலட்சுமியும் (29) காதலித்து வந்ததும், அவர்கள் இருவரும் ஊரை விட்டு தப்பி ஓடியதும் தெரியவந்தது.

இந்நிலையில், சிவசுந்தரபாண்டியனை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக்கோரி அவரது தாயார் மாரியம்மாள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆள்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் ‘என் மகனை அவர் படிக்கும் பாடசாலையில் கடமையாற்றிய ஆசிரியை கோதை லெட்சுமி (29) கடத்திச் சென்றுள்ளார். அவரால் என் மகனின் உயிருக்கு ஆபத்துள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆசிரியை கோதைலெட்சுமியை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக் கோரி அவரது தந்தையும் ஆள்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.

இதையடுத்து ஆசிரியையும் மாணவனையும் 3 வாரங்களில் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், ஆசிரியை கோதையும் அம்மாணவரும் தற்போது திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணிக்கு சென்று வருவதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.

உடனடியாக திருப்பூருக்கு விரைந்து சென்ற கடையநல்லூர் பொலிஸார் இன்று அதிகாலை மாணவனையும் ஆசிரியரையும் கைது செய்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -