குப்பைமேடாய் மாறியுள்ள சாய்ந்தமருது பிரதான வீதி -கல்முனை மாநகர சபையினரின் கவனத்திற்கு

முபாரக் -

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தின் பிரதான வீதியின் அவல நிலையினையே இங்கு படங்களில் கான்கிறீர்கள்.

சாய்ந்தமருதில் பிரதான வீதியில் மட்டுமல்லாமல் உள்ளக வீதிகள் உட்பட பல பொது இடங்களில் நாளாந்தம் குவியும் குப்பைகளை கல்முனை மாநகர சபையினர் சுத்தம் செய்ய தவறுவதாகவும் வாரத்தில் ஒரு நாள் மட்டும் சாய்ந்தமதுக்கு குப்பைகளை அள்ளும் வாகனம் வருவதாகவும் சில நாட்களில் இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவையே குப்பைகள் அகற்ற வாகம் வருவதாகவும் பரவலாக சாய்ந்தமருது மக்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.

இந்த குற்றச்சாட்டு பற்றி கல்முனை மாநகர முதல்வர் நிசாம் காரியப்பர் உட்பட சாய்ந்தமருதிலிருந்து கல்முனை மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் வரை எவரும் இன்றுவரை காத்திரமான நடவடிக்கைள் எடுக்காமல் பொடுபோக்காக இருப்பதாக சாய்ந்தமருது மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

படத்தில் குவிந்து கானப்படும் குப்பை இன்று காலை சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள ஜூம்மா பள்ளிக்கு முன்பாக கானப்படுகிறது.

பிரதான வீதியில் , ஜூம்மா தினமான இன்று ஜூம்மா பள்ளிக்கு முன்பாக இப்படி குப்பைகளை அகற்றாத மாநகர சபையினை சாய்ந்தமருது மக்கள் மிகவும் கடிந்து கொள்கின்றனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -