தாம் அதிகாரத்தை கைப்பற்றி ஒரு வருட காலப்பகுதியினுள், ஜனாதிபதி செயலகத்தின் செலவீனத்தை 60 சதவீதத்தால் குறைக்க முடிந்துள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ, சாவகச்சேரியில் மீட்கப்பட்ட வெடிப் பொருட்கள் தொடர்பில் எதிர்வரும் வாரமளவில் நாடாளுமன்றில் சிறப்பு உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக குறிப்பிட்டார்.
தற்சமயம் அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பவுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.