ராஜபக்ஷ அரசாங்கத்தில் முன்னணியில் செயற்பட்ட, தற்போதைய பாராளுமன்றத்திலும் மஹிந்த சார்பு குழுவில் உறுப்பினராக செயற்படும் அரசியல்வாதிகள் ஐந்து பேர் அடுத்துவரும் நாட்களில் கைது செய்யப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவர்கள் கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் மேற்கொண்டதாக கூறப்படும் லஞ்ச, ஊழல், மோஷடிகள் தொடர்பில், நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவு விசாரணைகள் நடாத்தி முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இன்னும் 31 அரசியல்வாதிகள் தொடர்பில் தற்பொழுது விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு, அது தொடர்பான அறிக்கை சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக விடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இது தொடர்பான அறிவிப்பு சட்ட மா அதிபரினால் வழங்கப்பட்டவுடன் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.