பழைய முறையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படாது என உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புதிய தேர்தல் முறைமை அறிமுகம் செய்வதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ள நிலையில் பழைய முறையில் தேர்தல் நடத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் முறையில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென அனைத்து அரசியல் கட்சிகளும் இணங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளதுடன், தேர்தல் நடாத்தாமை அரசாங்கத்திற்கும் சிக்கல் என்ற போதிலும் உரிய முறையில் தேர்தலை நடத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.