புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு இன்று - பிரதான சந்தேக நபரின் தலையில் சூட்டுக்காயம்

பாறுக் ஷிஹான்-
புங்குடுதீவு பாடசாலை மாணவி படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ்குமாரது தலையில் சூட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்று திங்கட்கிழமை (28) நீதிவான் றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது விசாரணை நிறைவடைந்த பின்னர் சிறைச்சாலை பஸ்ஸில் ஏறுவதற்காக சுவிஸ்குமார் சிறைச்சாலை உத்தியோகத்தர் சகிதம் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டிருந்தார்.

அப்போது ஊடகவியலாளர் ஒருவர் தலையில் என்ன நடந்தது என வினவியபோது தற்போதைய காலநிலை சூட்டினால் தலையில் காயம் ஏற்பட்டதாக குறிப்பிட்டார்.

மேலும் தங்களது வழக்கு தொடர்பாக கூகுள் வரைபடத்தை ஆராயந்து அறிந்தால் உண்மை வெளிவரும் என கூறினார்.

அத்துடன் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில் 5ஆம் மற்றும் 6ஆம் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் விசேட அனுமதியைப் பெற்றுச் சந்திக்க முடியும் என்றும் சாதாரணமாகச் சந்திக்க முடியாது எனவும் மன்றில் ஊர்காவற்றுறை நீதவான் ஏம்.எம்.எம்.றியால் தெரிவித்தார்.

தமது கட்சிக்காரருன் கதைக்க வேண்டும் என்ற கோரிக்கையை குறித்த சந்தேகநபர்கள் சார்பாக மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி அசேல டி சில்வா கோரி நின்றார்.

இதன்போதே கருத்து தெரிவித்த ஊர்காவற்றுறை நீதவான் ஏம்.எம்.எம்.றியால் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் டி.என்.ஏ அறிக்கை மற்றும் சான்று பொருட்களின் பகுப்பாய்வு அறிக்கைள் என்பன குற்றப்புலனாய்வு பொலிஸாரால் இன்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ் வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார் 

இவ்வழக்கில் வித்தியா சார்பாக சட்டத்தரணிகளான சுகாஸ் மணிவண்ணன் ராஜ்குமார் ஆகியோரும் 10 ஆவது சந்தேக நபர் சார்பாக சட்டத்தரணி ஜோய் மகிழ் மகாதேவா ஆகியோரும் ஆஜராகினர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -