திருகோணமலையில் வளர்ப்புத் தந்தையால் சிறுமி வல்லுறவு...!

எப்.முபாரக்-
திருகோணமலை மொறவெவ பகுதியில் பதின்மூன்றரை வயதுடைய சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டு சந்தேகநபரை அடுத்தமாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் சுபாஷினி சித்திரவேல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) உத்தரவிட்டார். 

மொறவெவ, கம்பங்கோட்ட பகுதியைச் சேர்ந்த 28வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் இரண்டாவது தடவை திருமணம் முடித்த மனைவியின் மகளை வல்லுறவுக்குட்படுத்தியதாக இரண்டாவது மனைவியினால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய சனிக்கிழமை (26)கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

வளர்ப்புத் தந்தையால் வல்லுறவு குற்றச்சாட்டின் பேரில் கைதான சந்தேக நபரை நேற்று (27) திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டார். இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை மொறவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -