கட்சியிலிருந்து மஹிந்தவை நீக்க ஜனாதிபதி மைத்திரி தீர்மானம்...!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கட்சியை இரண்டாக பிளவடையச் செய்ய தொடர்ந்தும் மஹிந்த ஆதரவளித்து வந்தால் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து மஹிந்தவை நீக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் சில முக்கியஸ்தர்கள் இன்னும் ஓரிரு தினங்களில் கட்சியை விட்டு வெளியேற்றப்படும் அறிகுறி தென்படுகின்றது என அக்கட்சியின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கட்சியின் சட்ட திட்டங்களைத் தொடர்ந்து துவம்சம் செய்து கொண்டு கட்சியை இரண்டாக உடைக்கும் சதியில் ஈடுபட்டுவரும் மேலும் சில கோடரிக் காம்புகளை இன்னும் ஓரிரு தினங்களில் கட்சியை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும் விவசாய அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்தார். அதேவேளை,

கூட்டு எதிர்க்கட்சியின் முதலாவது மக்கள் கூட்டம் மஹிந்த ராஜபக்ச தலைமையில் எதிர்வரும் 17ம் திகதி பிற்பகல் 3.00 மணியளவில் கொழும்பு ஹைட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கூட்ட எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இந்த தகவல்களை வழங்கியுள்ளார்.

ஞாயிறு சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறுகையில்;

படைவீரர்களுக்கு எதிராக செயற்படுவதனை நிறுத்துமாறு கோரியும், விவசாயிகளுக்கான நிவாரணங்கள் நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளியிட்டும், மக்கள் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டும், தேர்தல்கள் உரிய நேரத்தில் நடத்தப்படாமையை எதிர்த்தும் பாரியளவில் பேரணியொன்றும் கூட்டமொன்றும் நடத்தப்படவுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் தலைவர்களுக்கு மேலதிகமாக ஐந்து கட்சிகளின் தலைவர்களும் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

நாட்டுக்கும் இனத்திற்கும் எதிரான சக்திகளை முறியடிக்கும் தேசிய போராட்டத்தின் முதல் கட்டமாக இந்தக் கூட்டத்தை கருத முடியும் என டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -