மூன்று பாடசாலை மாணவர்கள் ஒன்றினைந்து பகிஸ்கரிப்பு போராட்டம்..!

எப்.முபாரக்-
திருகோணமலை, குச்சவெளி பிரதேசத்திலுள்ள மூன்று பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இன்று புதன்கிழமை (23) காலை அந்நூரியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பிரதான கதவை மூடி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி, கடந்த 03ஆம் திகதி அந்நூரியா முஸ்லிம் மகா வித்தியாலயம் ,அந்நூரியா கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் இலந்தைக்குளம் முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளைச் சேர்ந்த 1000ற்கும் மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் தொடர்ச்சியாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனையடுத்து, 10ஆம் திகதி கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், திருகோணமலை வலய கல்விப் பணிப்பாளர், குச்சவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் கூட்டாக சேர்ந்து கலந்துரையாடலொன்றை மேற்கொண்டனர்.

அக்கலந்துரையாடலில் கடந்த 16ஆம் திகதிக்கு முன்னர் ஆசிரியர் வெற்றிடத்தை நிரப்புவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டும் இன்று வரை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என மாணவர்கள் தெரிவித்தனர்.
'தமது பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்காவிட்டால் பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்களை உள்ளே விடமாட்டோம்' என தெரிவித்து பாடசாலையின் பிரதான கதவை பூட்டி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -