கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியளாலர் ஷிப்லி பாறூக் அவர்களின் வாக்குறுதி நிறைவேற்றம்..!




ஜுனைட்.எம்.பஹ்த்-

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியளாலர் ஷிப்லி பாறூக், கடந்த மாதம் 02.02.2016 அன்று மட்/மம/ கர்பலா அல்-மனார் பாடசாலைக்கு திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டு அங்குள்ள அவலநிலைமையை நேரில் பார்வையிட்டும், பாடசாலை அதிபர், ஆசிரியர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழு ஆகியோருடன் கலந்துரையாடி பாடசாலையின் குறைகளையும் தேவைப்பாட்டினையும் கேட்டறிந்தார் அதன்போது இம்முறை புலமைப்பரிசீல் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக பயிற்சி வினா விடை தாள்கள் அடங்கிய தொகுப்பினை தனது சொந்த நிதியிலிருந்து வழங்குவதாக வாக்குறுதியளித்தார் அதன் பிரகாரம் கடந்த வியாழகிழமையன்று (10.03.2016) புலமைப்பரிசீல் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஒரு போதுமான பயிற்சி வினா விடை தாள்கள் அடங்கிய தொகுப்பினை பாடசாலை அதிபரூடாக மாணவர்களுக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியளாலர் ஷிப்லி பாறூக் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் ஆசரிய ஆலோசகர், பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு அங்கத்தவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வில் விஷேட உரையாற்றிய மாகாணசபை உறுப்பினர் பொறியியளாலர் ஷிப்லி பாறூக் அவர்கள் தனது உரையின் போது..

இங்குள்ள பிள்ளைகள் மிகவும் திறமையானவர்கள் ஆனால் அவர்களுக்கு தேவையான பௌதீக வளங்கள் பற்றாக்குறை காரணமாக அவர்கள் போட்டி ரீதியான கல்வியில் தோற்றுப்போகிறார்கள்.

நகர்புறங்களில் உள்ள பிள்ளைகள் எவ்வாறு கல்வி கற்கின்றார்களோ அதே போல் எந்தக்குறையுமில்லாமல் இவ்வாறான எல்லைப்புற கிராமங்களில் உள்ள பிள்ளைகளும் கல்வியை பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஏழைக்குடும்பத்தில் பிறந்ததனால் முறையான கல்வி எனக்கு கிடைக்காமல் போய்விட்டதே என்ற எண்ணம் எந்தவொரு பிள்ளைக்கும் வரக்கூடாது. என்று தெரிவித்ததோடு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2017ம் ஆண்டு தனது சொந்த நிதியிலிருந்து இந்த பாடசாலையிலே கல்வி கற்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் தேவையான அப்பியாச கொப்பிகளை வழங்குவதாக வாக்குறுதியளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -