ஜெனீவா வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்வோம் - அக்கரைப்பற்றில் மக்கள் பேரணி

காணாமல் போகச் செய்தலை காணாமல் போகச் செய்வோம், ஜெனீவா வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்வோம்’ எனும் தொனிப் பொருளிலான மக்கள் பேரணி, எதிர்வரும் 30 ஆம் திகதி அக்கரைப்பற்று நகர மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

காணாமல் போனோரின் குடும்ப ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள பேரணி, எதிர்வரும் 30 ஆம் திகதி பிற்பகல் 01 மணி முதல் 04 மணிவரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் மங்கள சமரவீர, மனோ கணேசன், பிரதியமைச்சர் அனோமா கமகே, ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் எதிர்கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரா.சம்பந்தன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.

இதேவேளை, இப் பேரணி தொடர்பான பிரசார நடவடிக்கைகள் கடந்த வியாழக்கிழமை அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இடம்பெற்றது.

காணாமல் போனோரின் உறவினர்கள் இப் பேரணி பற்றிய பிரசுரங்களை மக்களுக்கு விநியோகித்ததோடு, சுவரொட்டி பிரசாரத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -