பாலமுனையில் ஜெயினுலாப்தீன் என்பவர் ஓடை ஒன்றில் இருந்து ஜனாஸாவாக மீட்கப்பட்டார்..!

எஸ்.சஜீத்-
காத்தான்குடியை அன்டிய பாலமுனை, ஓடாவியார் வீதிக்கு அண்மித்த பகுதியில் காணப்படும் ஓடை ஒன்றில் இருந்தே ஜெயினுலாப்தீன் எனும் குறிப்பிட்ட நபர் ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவமானது இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

மேலும் குறித்த நபர் பாலமுனை பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய ஜெயினுலாப்தீன், துவிச்சக்கரவண்டி திருத்துனர் என்பவரே ஜானாஸாவாக மீட்க்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த நபர் இரவு நேரத்தில் வேளை முடிந்து வந்த போதுதான் ஓடையில் தவரி விழுந்து மரணித்திருக்கலாம் என அன்டைய வீட்டார் பொலிஸாரிடம் தகவல் தெரிவிதத்தனர்.

தற்போது ஜானாஸா மேலதிக பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -