இலங்கை மின்சார சபையின் அதிரடி தள்ளுபடி...!

மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துபவர்களுக்கு விசேட சலுகைகளை வழங்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய முதல் மாதக் கட்டணத்தை விடவும் அடுத்த மாதம் 10 சதவீதம் குறைவாகப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு, விசேட தள்ளுபடி வழங்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவுகின்ற வரட்சியான காலநிலை, இன்னும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும், அதன் காரணமாக மின்சாரத்தைச் சேமிக்கும் வகையிலேயே இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அச்சபை அறிவித்துள்ளது.

அதேவேளை ஜெனரேட்டர்களைப் பயன்படுத்துகின்ற தனியார் நிறுவனம் உள்ளிட்ட பிரிவினருக்கு, ஊக்கத்தொகையொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -