S.சஜீத்-
பொய் சொல்லி விட்டு ஏமாற்றி அடுத்தவர்களை முட்டாளாக்கி விட்டோம் என்று பெருமை கொள்வதற்கு ஒரு தினம் தேவையா?
ஏமாற்றுபவன் என்னைச் சார்ந்தவனல்ல என்றுரைத்த ஏந்தல் நபி (ஸல்) அவர்களின் சமுதாயத்தில் ஏமாற்றுவதற்கு ஒரு நாளா? பொய்யும் புரட்டும் கேலியும், கிண்டலும் செய்து ஏமாற்றி விட்டு ஏளனமாகச் சிரிப்பது, இறை நம்பிக்கையாளர்களின் பண்பா? முஸ்லிம்களே! சிந்திப்பீர்களாக!
ஏப்ரல் ஃபூல் என்ற தினத்தைக் கொண்டாடி உங்களை நீங்கள் ஏமாற்றாதீர்கள்!
ஏப்ரல் ஃபூல் என்று சொல்லிக் கொண்டு அடுத்தவர்களை முட்டாளாக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அதில் சந்தோஷம் பெரும் முட்டாள்களின் தினம்தான் இந்த ஏப்ரல் முதலாம் தினம்!
சத்தியம் செய்து நம்ப வைத்தாவது ஏப்ரல் ஃபூல்...! என்று ஏளனமாகச் சிரிப்பதை ஒரு திறமையாக நினைத்துக் கொள்கிறார்கள் நம்மவர்களின் சிலர். ஏமாறுபவர்களும் கூடவே சிரித்துக் கொண்டாலும் அது அவர்களுக்கு நிச்சயம் மனச்சங்கடத்தை ஏற்படுத்தும் என்று யாரும் நினைப்பதில்லை.
கெட்டால் எல்லாம் ஒரு ஜாலிக்குதானே...? ஏமாறிய யாருமே வருத்தப்பட்டதில்லையே..! என்பார்கள்.
ஆனால் தான் மட்டும் மற்றவர்களிடம் அன்றைய தினம் இப்படி ஏமாறும் போது நாம் ஏமாறுவதால் முட்டாளாக்கப்படுகிறோமே அடுத்த முறை ஏமாறக் கூடாது என்று உஷாராக இருப்பார்கள். ஆகவே மற்றவர்களிடம் நாம் ஏமாறும் போது மட்டும் அதை நம் மனம் முழுமையாக ஏற்றுக் கொள்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களைச் சிரிக்க வைப்பதற்காகப் பேசி, பொய் சொல்பவனுக்கு கேடு உண்டாகட்டும்! கேடு உண்டாகட்டும்! கேடு உண்டாகட்டும்! அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதா (ரலி), நூல்: திர்மிதீ 2315
ஆகவே இந்த முட்டாள் தினத்தில் முட்டாள்கள் நம்மை ஏமாற்றுவதற்கு முட்பட்டால் அவர் எம்மை ஏமாற்றிவிட்டார்கள் என்று மனசு சங்கடப்படாதீர்கள்
நீங்கள் அவர்களை முட்டாள்கள் உருவாக்கிய முட்டாள் தினத்தினை இவரும் ஆதரிக்கும் நபர் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.