எம்.வை.அமீர்-
அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் கடந்த 2015 ஆம் ஆண்டு கல்விப்பொது தராதர உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ள மாணவர்களுக்கும் அண்மையில் வெளிவந்த (2015) கல்விப்பொது தராதர சாதாரண தரத்தில் 9 பாடங்களிலும் A தர சித்தியை பெற்றுள்ள மாணவர்களுக்குமான புலமைப்பரிசில் ஒன்றினை தென்கிழக்கு சமூக நலன்புரி ஒன்றியம் வழங்க தீர்மானித்துள்ளது.
எனவே குறித்த தகமைகளையுடைய மாணவர்கள் அவர்கள் தொடர்பான தகவல்களை கீழ் வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு வழங்குவதனூடாக குறித்த புலமைப்பரிசில் திட்டத்தில் இணைந்துகொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்புகொள்ள வேண்டிய இலக்கம் 0777 561 654 அல்லது 0777 266 162