பொதுபல சேனாவின் முறைப்பாடும் ஜாதிக பலசேனாவின் வாக்குமூலமும்..!


பொதுபல சேனா அமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடொன்றின் பேரில் ஜாதிக பல சேனாவின் செயலாளர் வட்டரக விஜித தேரர் இன்று நாரஹேன்பிட்ட பொலிஸுக்கு வாக்குமூலம் வழங்க வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வட்டரக விஜித தேரர் தேசியக் கொடியை அகௌரவப்படுத்தியதாக தெரிவித்து, பொதுபல சோன விஜித தேரருக்கு எதிராக கீருலபன பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.

இந்த முறைப்பாட்டை விசாரணை செய்ய கிருலப்பனை பொலிஸார் நடவடிக்கை எடுக்கும் போது, தனக்கு பாதுகாப்புப் பிரச்சினை காணப்படுவதாக வட்டரக விஜித தேரர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனால், தன்னை வேறு ஒரு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு விஜித தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வேண்டுகோளின் பேரிலேயே அவர் இன்று நாரஹேன்பிட்ட பொலிஸுக்கு வாக்குமூலம் வழங்க வருகை தரவுள்ளார்.

தேசிய கொடிக்கு அகௌரவம் ஏற்படுத்தியதாக தனக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தாலும், தான் அறிந்த வகையில் அவ்வாறான எதுவும் இடம்பெறவில்லையென வட்டரக விஜித தேரர் நேற்று தனிப்பிட்ட ரீதியில் ஊடகமொன்றிடம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -