எப்.முபாரக்-
திருகோணமலை சிறைச்சாலை விளக்கமறியலில் கைதியொருவர் இன்று புதன்கிழமை (30) மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார். யாழ்பாணம், செட்டியார் புரத்தினைச் சேர்ந்த 52வயதினையுடைய அருளப்பு பத்திநாதன் என்பவரே உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மனைவியை எறித்துக்கொலை செய்த குற்றச்சாட்டு வழக்கின் சந்தேக நபராக இருந்தவரே இவ்வாறு மாரடைப்பினால் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளார்.
சடலம் தற்போது பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு திருகோணமலை சிறைச்சாலை சடலத்தினை உறவினர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.