கவிஞர் எஸ்.ஜனூஸின் ‘மூசாப்பும் ஒரு முழ வெயிலும்’ கவிதை நூல் பற்றியதான அவதானம்

கவிஞர் மருதமுனை விஜிலி-

லக்கியச் சூழலின் கவிதா இயங்குதள நகர்வில் கவிதைகளின் சாயல் வித்தியாசமானது. அந்த வகையில் 2012இல் “தாக்கத்தி” எனும் கவிதைத் தொகுப்பைத் தந்த இலங்கை வானொலி ஒலிபரப்பாளர்-கவிஞர் எஸ்.ஜனூஸ் தற்போது ’மூசாப்பும் ஒரு முழ வெயிலும்’கவிதை நூலினை வெளிக்கொணர்ந்துள்ளார். 

இது இவ்வாறிருக்க கலை இலக்கிய செயற்பாட்டுத் தளத்தில் ஒரு பன்முக ஆளுமைத் தன்மையினைப் பெற்றிருக்கும் ஜனூஸ் ஏலவே ’பெத்தம்மா’(2009) பதியம்(2009) மற்றும் ‘வை திஸ் கொலவெறி’ ஆகிய ஆவணம்,குறும்பட முயற்சிகளையும் கலை இலக்கியச் சூழலில் சமர்ப்பித்தவர்.

’மூசாப்பும் ஒரு முழ வெயிலும்’ கவிதைப் பிரதி குறித்த அவதான நுணுக்கங்களை உள்நுiழைந்து ரசித்தல் அல்லது ஆழமாய் மேவுகின்ற போது பலதரப்பட்ட சுகானுபவங்கள் நமக்குள் படர்கின்றன.

பிரதேச வழக்குச் சோற்கள்- காலத்திலிருந்து மருவி விடாத பாவனையில் இருப்புக் கொள்கின்ற கவித்துவங்கள்,மண்வாசைன செதுக்கும் மொழிகள் இக்கவிதைகளோடு இணைய வைக்கின்றன. வாசகர்களுக்கு வாசகர் ரசனையில் வேறுபடினும் நல்ல கவிதை நுகரும் சராசரி வாசகனை ஆட்கொண்டு விடும் பலம் ஜனூஸின் எழுத்தில் கைவந்திருக்கிறது. 

கவிதையின் உள்ளார்ந்த சக்தியோடு வலம் வரும் இவை நேரிய சிந்தனைகளைக் காட்சிப்படுத்துகின்றன.

நவீனத்துவம் பற்றிப் பேசப்படும் இக்கால நகர்வில் இக்கவிதைகள் புரிதல் கொள்ளக் கூடிய சந்தர்ப்பத்தைத் நமக்கு லாவகமாய் தருகின்றது. ’மூசாப்பும் ஒரு முழ வெயிலும்’ பிரதியூடாக சொல்ல வரும் விடயத்துவத்தை கவி வளம் மிளிர வைத்து, கவிதை வாசகன் குழம்பி விடாமல் ஆழமாய் அணி சேர்க்கின்றார் கவிஞர். 

வானம்பாடிக் கவிஞர்களில் ஒருவரும் புதுக்கவிதையின் முன்னோடியுமான மு. மேத்தா – தனது பிற்குறிப்பு வாழ்த்தில் “கரையேறிய போது ஒரு கவிஞனைக் கண்டுபிடித்தேன்” என ஜனூஸின் கவிதா ஆளுமையை பறை சாற்றுகின்றார். கவிஞர் யோ. புரட்சி முற்குறிப்பில் ஈழத்து இலக்கிய வானில் எழில்மிகு பறவையாய் சிறகசைக்கும் ஜனூஸ்; பல்பக்கம் பறக்கும் பறவை” என மனம் திறக்கின்றார். இத்தனைக்கும் படைப்பாளிகள் உலகத்தின் நிறுவுனர் ஐங்கரன் கதிர்காமநாதன் “நிறைந்த தமிழ்; ஆளுமைகளுடன் தன் படைப்ழுக்களை வெளிக்கொணர்ந்து வந்திருக்கும் அன்புச் சகோதரர் ஜனூஸ்; என எடுத்தியம்புகிறார்.

44 கவிதைகள் தாங்கி வெளிவந்த்திருக்கும்இவ்வெயிலுக்குள் பல கோணங்களில் அழகு நிழல்கள் குடை பிடிக்கின்றன. இக்கவிதைகளை ஒரு சேர வாசித்தலின் பிரதிமையாக பல சமகால களங்ககள் கிடைக்கின்றன.

#மனிதாபிமான அரவணைப்பு
#அ,றிணைப் பொருட்களின் வாலாயம்

(01) மனிதாபிமான அரவணைப்புக்குள் நிறையவே இவர் கவிதைகள் கருக்கொள்கின்றன. தம்பி , குழந்தை உலகம் , இதயம் உறிஞ்சிய சமகாலம் ,மைய்யித்துவீடு போன்றனவும் - 

(02) அ,றிணைப் பொருட்களோடு தன் உணர்கூகளை பதிவு செய்யும் இக்கவிதைகள் ஆழமான கருத்தியலானவை. இரட்டைப் புனைவுக்குள் யதார்த்தத்தை பின்னும் வல்லமையும்,அதனை உயிர்ப்புள்ள குறியீடுகளோடு பேச வைத்திருக்கும் புலமைச் சான்றும் ஜனூஸின் கவிதைகளில் துலாம்பரமாய் இழையோடுவதை அவதானிக்க முடிகிறது. 

குதிரையோடுதல்,வீதிகளும் வீதிக்கு வரும் , கலப்படமாகிய மழை, மனிசப் பழங்கள்,கள்ளப்பட்ட காற்று,உப்புச் சிரட்டைக்குள் உழுந்து சாகு ,கடதாசி மாளிகை ,நெட்டி முறித்த நிலா ஆகிய கருப்பொருள் அமைந்த வடிவங்களும் உயிர்ப்பு நிறைந்த தூக்கலான கவிதைகளாக ஒளிர்கின்றன.

இந்த வறையறைகளுக்குள்ளீருந்து சற்று விலகி ஜப்பானிய ஹைக்கூ மற்றுமான ’சென்’ வடிவிலமைந்த இரண்டு கவிதைகளும் கவனம் பெறுகின்றன. அதாவது மனிதன்,மழை ஆகிய கவிதைகளே அவை என அடையாளப்படுத்தலாம். மழை என்ற கவிதையில் ’புதுக்குடை வாங்கியும் நனைய மறுக்கிறது மனசு’ என்பதாக கவிஞர் ஆதங்கம் சொட்டுகிறார். கவிதைச்ஹ் செல் நெறியில் இது மனசு நனைக்கும் கவிதையாகி கனிகிறது.

தற்போது முகநூலில் யாரும் முகம் காட்ட வேண்டுமானால், ஒரு கவிதையோடு தான் வர வேண்டும் என்ற ரெடிமேட் மரபு வேரூன்றிள்ளது. ’எப்படியோ கவிதை வந்தால் சரி’ என்று சிலர் நினைப்பதாக அங்கலாய்க்கின்றார் ஜனூஸ்.

இதனை ’உப்புச் சிரட்டைக்குள் உழுந்து சாகு’ கவிதையில் வெளிச்சமிடுகிறார். ’அவனது முற்றத்தில் கொஞ்சம் இவனது முற்றத்தில் கொஞ்சம்’ என எழுதிச் செல்கின்றார். 

மட்டுமன்றி,அண்மைக் காலத்தில் இத்தேசத்தைச் சிதைத்து கலங்க வைத்த காமக் கழுகுகள்- தான் அடைகாத்த கோழிக் குஞ்சுகளை நசுக்கும் அநீதங்களை உலகறிய வைக்கிறார். “உயர்திணையின் சாபக்கேடுகள்” எனும் நெடும் கவிதையில் சிறுவர் துஷ்பிரயோகத்தை சாடியிருக்கிறார்.இது ஒரு அற்புதமான சமகாலக் கவிதை எனலாம்.தன் ஆணாதிக்க நிலை தவிர்த்து மனிதாபிமானத்தை விதைத்துச் செல்கிறார்.

“இரக்கம் செத்த நாய்கள்  இந்த இகத்திற்கு தேவையில்லை கல்லால் அடியுங்கள் என்றால் - முதல் கல் யாருடையது” என்ற வரிகளுக்குள் தன் அறச்ஹ் சீற்றத்தையும், சமூகத்தின் நழுவலையும், செய்திக்காய் அலையும் ஊடகங்களின் வண்புணர்வையும் தோலுரித்து காட்டுகிறார் ஜனூஸ்.

தற்கால கவிதா நகர்வில் நெடுங் கவிதைத் சித்தரிப்பு அருகி வருகின்ற நிலைவரம் காணப்படுகிறது. 60களில் பேராசிரியர் எம்.ஏ.நுஹ்மான்,சண்முகம் சிவலிங்கம் தொகுத்த “கவிஞன்” இதழில் இடம்பிடித்த கவிதைகளுக்கு பிறகு மருதூர்க்கனி,எம்.எச்.எம்.அஷ்ரப், வேதாந்தி,மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத், வ.ஐ.ச.ஜெயபாலன்,சோலைக்கிளி இவர்களின் தொடருக்குப் பின்னராக நெடுங் கவிதைத் திராணி ஜனூஸிற்கு வாலாயப் பட்bருக்கிறது. 

இவரின் கவிதைகளைப் புரட்டும் போது, கவிதை உணர்வைத் தாண்டிய மானுடம் அல்லது அதற்கு ஒப்பான ஏதோ ஒன்று நமக்குள் இழையோடி மனசு கனக்கிறது. ஜனூஸ் இன்னும் பல உயிர்ப்புள்ள இலக்கிய பிரதிகளை, ஆதர்சனமான எழுச்சி மிக்க எழுத்துக்களை கவிதா உலகிற்கு தர வேண்டும் என்ற பல நூறு வாழ்த்துக்களோடு, அன்பு நிறைந்த கை குலுக்கலும்.

நூல்- மூசாப்பும் ஒரு முழ வெயிலும்
அனுசரனை-படைப்பாளிகள் உலகம்
வெளியீடு- வள்ளுவர்புரம் செல்லமுத்து வெளியீட்டகம்
விலை- 280 ரூபாய்
தொடர்பு முகவரி- இல.61,லெனின் வீதி,மாளிகைக்காடு மேற்கு,காரைதீவு, இலங்கை. 
அலைபேசி-094774073361
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -