தனது கணவரின் கொடுமை தாங்க முடியாமல், டெல்லியின் பிரபல மொடல் அழகி பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
டெல்லியை சேர்ந்த 25 வயது மொடல் அழகி பிரியங்கா கபூர், கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாசற்கதவு உட்பக்கம் பூட்டியிருந்தாதால், பொலிசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அவர் இரண்டு பக்கமுள்ள ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார்.
அந்த கடிதத்தில் 'எனக்கு யாரும் இல்லை என்ற ஆதங்கத்தில் என் கணவர் நிதினை அவசரப்பட்டு திருமணம் செய்து கொண்டேன். ஆனால் அவர் என்னை தினமும் அடித்து துன்புறுத்துகிறார். நான் வெளியே செல்வதை அவர் தடுக்கிறார். என்னை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறுகிறார். ஆனால் நானோ இந்த உலகை விட்டே போகிறேன். என்னால் இனிமேல் அவரின் கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாது' என்று குறிப்பிட்டுள்ளார்.