ஸ்ட்ரீட் வியூ - மாப்பிள்ளை பெண்ணும் மேப்பில தேடலாம்

ஸ்ட்ரீட் வியூ

மாப்பிள்ளை பெண்ணும்
மேப்பில தேடலாம்.
கேப்பில ஆடியதும்
மேப்பில மாட்டலாம்

சீதனம் வீடு
ஆதனம் காரு
யாதும் இதிலே
யாவரும் தேடலாம்

திருடி ஓட
தேவை வழிகளை
த்ரிடீ மேப்பில்
தெளிவாய்த் தேடலாம்

எட்டிப் பார்த்தவர்
இப்ப போணில்
தட்டிப் பார்க்கலாம்
திட்டு வாங்காமல்

பெஷனாய் உடுத்து
பில்டப் கொடுக்கும்
பசங்க சிலபேர்
பழைய சாரணும்
கசங்கிய பெனியனும்
கன்றாவி பாரடா

கொடியில உடுப்பு
அடியில வாளி
படியில செருப்பு
பக்கத்தில பம்பஸ்
முடியல சிலரின்
முன் வாசல் கோலம்

அடிக்கடி நடக்கும்
அகல வீதிகளை
சொடுக்கிப் பார்க்கிறார்
ஸூம் பண்ணிப் பார்க்கிறார்
கடுப்பாய் ஏசுறார்
காணல்ல தன் போட்டோவ.

ஆக்கள்ட போட்டோவ
அசிங்கமாய்ப் பிடித்து
கூக்கிள்ள போட்டதற்கு
கொதிக்கும் போராளியே
குசினிக்குள் வந்தா
கூகிள் எடுத்தான்?

உண்மையில் இந்த
உயர் தொழி நுட்பத்தில்
நன்மையே அதிகம்
நாம் அதை உணர்வோம்

Mohamed Nizous
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -