எஸ்.அஷ்ரப்கான்-
கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகத்தினருக்கும் திருகோணமலை ஈஸ்டன் ஈகிள் விளையாட்டுக்கழகத்தினருக்கும் இடையிலான சிநேகபூர்வ உதைப்பந்தாட்ட போட்டி நேற்று வெள்ளிக்கிழமை (25) கல்முனை சந்தாங்கேணி பொது வளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
மிக சிறப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக் கழகம் 04-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் மிகச் சிறப்பாக கல்முனையின் பிரபல்யம் வாய்ந்த விளையாட்டுக்கழகமான சனிமௌன்ட் அணியினர் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.