ஏ.எஸ்.எம்.ஜாவித்-
பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான சர்வதேச கலாசார நிலையம் தாருத் தக்வா கலாபீடத்துடன் இணைந்து நடாத்தும் அகில இலங்கை ரீதியிலான அல்குர்ஆன் மனனப் போட்டி 2016 க்கான நிகழ்வுகள் எதிர்வரும் ஏப்ரல் 2ஆம், 3ஆம் திகதிகளில் கொழும்பு-10, அல்-ஹிதாய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் காலை 8.30 மணிக்கு நடாத்த ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இப்போட்டிகள் ஆண், பெண் ஆகிய இரு பிரிவினருக்குமிடையில் நடாத்தப்படவுள்ளதுடன் அகில இலங்கை ரீதியில் சுமார் 956 மாணவ, மாணவியர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். போட்களில் சுமார் 779 ஆண் மாணவர்கள் 24 பிரிவுகளினூடாகவும், 177 பெண் மாணவிகள் 7 பிரிவுகளினூடாகவும் பங்குபற்றவுள்ளதுடன் 1ஆம்,2ஆம்,3ஆம்,4ஆம் மற்றும் 5ஆம் இடங்கள் வரை பெறுமதியான பணப்பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தங்கது.
போட்டிகள்
12வயதுக்கு கீழ் ஆண்,பெண் 3 ஜூஸ்உ
15வயதுக்கு கீழ் ஆண்,பெண் 5 ஜூஸ்உ
15வயதுக்கு மேல் ஆண்,பெண் 10 ஜூஸ்உ
15வயதுக்கு மேல் ஆண்,பெண் 20 ஜூஸ்உ
15வயதுக்கு மேல் ஆண்,பெண் 30 ஜூஸ்உ
இவற்றில் பங்குபற்றும் அனைவருக்கும் அழைப்பிதழ் கடிதங்கள் அவரவரின் தனிப்பட்ட முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பங்குபற்ற வருபவர்கள் அழைப்பிதழ் கடிதங்களை தவறாது எடுத்து வருமாறும் மௌலவி ஹாபில் ஜூஸ்ரி கேட்டுக் கொள்கின்றார்.