இலவச குழந்தை உளவியல் கருத்தரங்கு..!

சிறுவர் துஷ்ப்ரயோகம் மற்றும் சிறுவர் சீர்திருத்தக் கல்வி மேம்பாடு போன்ற முக்கிய விடயங்களை மையமாகக் கொண்டு மாணவர்களையும், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களையும் தெளிவுப்படுத்தும் முகமாக இலவச கருத்தரங்கு களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் 03.04.2016 (sunday) ஆம் திகதியன்று காலை 9 மணி முதல் 12 மணி வரையும் மற்றும் பணந்துறை ஜீலாம் மத்திய கல்லூரியில் மாலை 3 மணி முதல் 6 மணி வரையும் நடாத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு எமேசன் உயர் கல்வி நிறுவனம் மற்றும் முன்பள்ளி அபிவிருத்தி அமைப்பு ஆகியன இணைந்து இந்த இலவச கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கையில் முன்னணி உளவியல் விரிவுரையாளர்கள் மற்றும் துறை சார் நிபுணர்கள் கலந்து கொண்டு மிக பயனுள்ள விடயங்கள் குறித்து ஆய்வு ரீதியிலான கருத்துக்களை முன்வைத்து தெளிவு படுத்த உள்ளனர்.

மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை இக் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -