மஹிந்தவை கொலை செய்த பரீட்சைத் திணைக்களம்

பௌத்த சமய பரீட்சை வினாத்தாளில் மஹிந்த ராஜபக்சவின் பெயரையும் உள்ளடக்கிய வினா பத்திரமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தரம் 10 இற்கான பௌத்த சமய வினாத்தாளில் இந்த வினா சேர்க்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காலஞ்சென்ற இந்நாட்டின் அரசியல் தலைவர்களின் பெயர்களுடன் இணைத்து விடைப் பகுதியில் வரும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ள வினாப் பத்திரமொன்று வடமேல் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சமய பாடத்தில் தற்போதைய அரசியல் தலைவரை சேர்த்துள்ளமை பௌத்த மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு சேர்க்கப்பட்டுள்ள வினா வருமாறு,

தன்னால் மேற்கொள்ளப்படும் சகல நற்காரியங்களும் நல்ல பதிவேட்டில் பதியப்பட்டு, மரண வேளையில் அதனை வாசிக்கக் கொடுக்கப்பட்டு தன்னால் நிர்மாணிக்கப்பட்ட விகாரையின் பக்கம் பார்த்து கடைசி மூச்சை விட்ட, இந்த தாய் நாட்டை எதிரிகளிடமிருந்து மீட்ட ஆட்சியாளர் யார்?

தெரிவு விடைகள்,

1. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச
2. முதல் நிறைவேற்று ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன
3. துட்டகெமுனு மன்னன்
4. மகா பராக்கிரமபாகு அரசன்

ஜப்னா.முஸ்லிம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -