உன்னதமான ஊடகத்துறையை அசிங்கப்படுத்தும் சில தெருக்கூத்தாடிகள்- சபீஸ் சாடல்

பத்திரிகை துறையில் தனக்கென்று ஒரு இடத்தினையும் நிலையான வாசகர்களையும் கொண்ட சுடரொளி பத்திரிகையை மனம் கொண்டு வாழ்த்துவதிலும் நானும் இப்பத்திரிகையின் வாசகன் என்பதிலும் பெருமிதமடைகின்றேன் என அக்கரைப்பற்று சபீஸ் தெரிவித்தார். 

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இருந்தாலும் நம்பகத்தரமான பத்திரிகையின் செல்வாக்கை சிதறடிக்கும் வகையில் அக்கரைப்பற்று மேலதிக நிருபர் ஒருதலைபட்சமாக உண்மையை அறிந்து கொள்ளாமல் இங்குள்ள செல்வாக்கு இழந்த ஒரு அரசியல்வாதியின் மைத்துனன் முறையான இவர் அடியாளாக இருந்து செய்தி வெளியிட்டுள்ளமை இப்பத்திரிகையின் நற்பெயருக்கு பங்கம் ஏற்படுத்தி உள்ளது.

அச்செய்தியானது கடந்த சனிக்கிழமை (21/03/2016) வெளியான பத்திரிகையில் அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் நீச்சல் தடாகம் திறப்பு, ஜனாதிபதி,பிரதமர் வருகை இரத்து, அழைப்பின்றி வந்த அதாஉல்லாவின் ஆதரவாளர் என்று செல்கின்றது


இச்செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்பதனை நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் காரணம் தேசிய பாடசாலையின் நீச்சல் தடாகம் ஜனாதிபதி வராவிட்டால் திறக்கக்கூடாது என அபிவிருத்தி சங்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு சங்க புத்தகத்திலும் எழுதப்பட்டுள்ளது.. இவ்விடத்தில் மக்கள் ஒன்றை கவனிக்க வேண்டும் ஜனாதிபதியை அழைத்து வருவதாக கூறியவரின் மீது நம்பிக்கை இல்லாமையின் காரணமே பாடசாலை அபிவிருத்தி சங்கம் இவ்வாறான ஒரு தீர்மானத்தை எடுக்கக் காரணம் என்பதனை புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன் அதனால் நீச்சல் தடாகம் இன்னமும் திறக்கப்படவில்லை.

எனவே பத்திரிகையாளர் என்பவர் புலனாய்வுப் பிரிவுக்கு ஒப்பாக தகவல்களை சேகரிக்கக் கூடியவர் ஆகவே உங்களது நிருபரை கொஞ்சம் பரிட்சித்துப்பாருங்கள் தகமைகள் உண்மையானவையா என்று, நான் அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க பொருளாளர் எனக்குரிய அழைப்பிதழை கலாநிதி செயனுடீன் எனது வீட்டுக்கு வந்து அவர் கைகளினாலே கொடுத்து விட்டு சென்றார் ஆகவே எவ்வாறு நான் அழைப்பில்லாமல் சென்றேன் என ஒரு அரசியல்வாதியின் சுயநலத்துக்காக அன்நிருபர் என்மீது அபாண்டமான குற்றச்சாடை சுமத்தலாம்?

குறிப்பிட்ட அரசியல்வாதியால் பாடசாலை சமூகம் நன்றாக ஏமாற்றப்பட்டுள்ளது ஒரு பாடசாலைக்கு நாட்டின் அதிஉத்தம ஜனாதிபதியும் பிரதமரும் வருவதென்றால் முறையாக பாடசாலை அதிபரினாலும் பாடசாலை சமூகத்தினாலும் அழைப்பு விடுக்கப்பட்டு அதற்கு ஜனாதிபதியினாலும் பிரதமரினாலும் எழுத்துமூல அனுமதி வழங்கப்பட்டிருக்க வேண்டும் இவைகள் எதுவும் நடைபெறாமல் ஜனாதிபதியும் பிரதமரும் வருவார்கள் என ஒரு கட்சியின் செல்வாக்கு இழந்த கடைசி நிலை அரசியல்வாதியால் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நம்பி எவ்வாறு பாடசாலை சமூகம் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கான பல இலட்சம் ரூபாய்க்களை வரவேற்புக்காக செலவிட்டது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது

ஆகவே ஜனாதிபதியும் பிரதமரும் இப்பாடசாலைக்கு வருவதாக எந்தவொரு உறுதிமொழியும் பாடசாலை சமூகத்திடம் கொடுக்கவுமில்லை இவர்கள் கேட்கவுமில்லை.

இது முற்று முழுதாக ஏமாற்று வேலை ஜனாதிபதி வருவதாக கூறி குறிப்பிட்ட அரசியல்வாதி அக்கட்சியின் தலைவரை கொண்டு புதிய கட்டடங்களை திறப்பதற்கான சதிவேலையினை செய்தார் என்பதே உண்மை
இப்பாடசாலையின் அனைத்து கட்டடங்களும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா வினால் கட்டப்பட்டவைகள் அவருக்கு அழைப்பில்லாமல் திறப்பதற்கு அப்பாடசாலை மண் இவர்களை அங்கீகரிக்கவில்லை என்றே நான் பார்கிறேன்

பாடசாலைக்குள் அரசியல் செய்ய விரும்பவில்லையாம் ஒரு அரசியல்வாதி என்று உங்கள் நிருபர் கூறியுள்ளார் அவ்வாறென்றால் தேசிய பாடசாலையின் முன் கதவடியில் முஸ்லிம் காங்கிரசின் மாநாட்டுக்கான அழைப்பிதழ் பதாகை ஒன்று 20 அடி உயரம் கொண்டதாக வைக்கப்பட்டது எதனால்? இது எங்களுக்கு தெரிந்து எந்தவொரு அரசியல்வாதியும் செய்யாத கீழ்த்தரமான செயற்பாடு என்பதனை அன்நிருபர் சுட்டிக்காட்டாதது ஏன்?

ஆகவே அக்கரைப்பற்று மேலதிக நிருபரின் செய்திக்கான விளக்கங்களையும் எனது மறுப்பினையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார். 

SM சபீஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -