பி.எம்.எம்.ஏ.காதர்-
உள்ளுராட்சி மன்றங்கள் நிதி மூலங்களைப் பெறுவதில் தெளிவான தீர்மாங்களையும், ஆழமான அறிவையும் பெறவேண்டிய தேவை இருக்கின்றது ஆகவே இதற்கான தகவல்களை சேகரிப்பதிலும், ஆவணங்களைத் தயாரிப்பதில் உள்ளுராட்சி மன்றங்களின் உத்தியோகத்தர்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் தெரிவித்தார்.
உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் அனுசரணையுடனும், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடனும் ஆசியா மன்றம் உள்ளுராட்;சி மன்றங்களில் புதிதாக நடைமுறைப் படுத்தவுள்ள உள்ளுராட்சி ஆளுகை செயற்திட்டம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமுல் படுத்தப்படவுள்ளது.
இத்திட்டம் தொடர்பான இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை கடந்த வெள்ளிக் கிழமையும், சனிக்கிழமையும் (25,26.03-2016) மட்டக்களப்பு ஈஸ்ட் லகுன் ஹோட்டலில் நடைபெற்றது இங்கு உரையாற்றிய போதே உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் இவ்வாறு தெரிவித்தார்.
ஆசியா மன்றத்தின் பிரதம தொழில் நுட்ப ஆலோசகர் ஏ.சுபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையில் ஆணையாளர் எம்.வை.சலீம் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்தாவது :-
உள்ளுராட்சி மன்றங்கள் நிதி மூலங்களைப் பெறுவதற்கான வழிகாட்டல்களை ஆசியா மன்றம் செய்து வருகின்றது அதற்கு நாங்கள் நன்றி செலுத்துகின்றோம் என்றார்.
ஆசியா மன்றத்தின் இந்த செயற் திட்டத்திற்கான தொழில் நுட்ப நிபுணர்; எம்.ஐ.எம்.வலீதின் நெறிப்படுத்தலில் வடக்கு, கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர்கள், உதவி உள்ளுராட்சி ஆணையாளர்கள், இரண்டு மாகாணங்களிலும் தெரிவு செய்யப்பட்ட 12 உள்ளுராட்சி மன்றங்களின் பிரதி நிதிகளும் இந்த பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டனர்.