ஆரியக்குளத்தில் இறந்து கிடக்கும் அதிக மீன்கள் காரணம் என்ன?

பாறூக் சிஹான்-

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள ஆரியக்குளத்தில் மீன்கள் திடிரென இறந்த நிலையில் காணப்படுகின்றது. இதன் காரணமாக இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகின்றது.

பலாலி வீதி யாழ்ப்பாணம் நகரப்பகுதியை இணைக்கும் வீதியில் அமைந்துள்ள இக்குளம் பழைமை வாய்ந்தது. அக்குளம் முன்னால் பௌத்த விகாரை ஒன்று அமைந்துள்ளது. எனினும் இக்குளம் இதுவரை உரிய பராமரிப்புடன் காணப்பட்டு இடையில் கைவிடப்பட்டதாகவே தெரிகின்றது.

குளத்தை சுற்றி என்றுமே காணப்படாத தாமரை படர்ந்து வளர்ந்துள்ளது. இதன் காரணமாக என்னவோ மீன்களிற்கு உரிய சுவாசம் கிடைக்காமல் இறந்திருக்கலாம் என்கின்ற சந்தேகமும் உள்ளது.

ஆனால் இக்குளத்தின் கரையில் மதுபான போத்தல்கள்,கிருமி நாசினி மாதிரியிலான போத்தல்கள் மிதக்கின்றன. தற்போது துர்நாற்றம் வீசுவதனால் இப்பகுதியினால் செல்லும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -