மாகாண சபை உறுப்பினர் அன்வரின் நிதி ஒதிக்கீட்டில் கோல்டன் ஸ்டார் அணியினருக்கு சீருடை வழங்கி வைப்பு..!

எம்.ரீ.ஹைதர் அலி-
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் அவர்கிளின் 2015ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதிக்கீட்டின் கீழ் திருமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலக முள்ளிப்பொத்தானை ஈச்ச நகர் கோல்டன் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் உதைப்பந்தாட்ட அணியினருக்கு ரூபா. 30,000.00 பெறுமதியான உதைப்பந்தாட்ட சீருடை வழங்கி வைக்கப்பட்டது.

இதனை 2016.03.23ஆந்திகதி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் அவர்கள் கோல்டன் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் உதைப்பந்தாட்ட அணியினரிடம் கையளித்தார். இந்நிகழ்வில் தம்பலகாமம் பிரதேசத்தின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளை தலைவர் நதீர்கான், செயலாளர் ரஹ்மதுல்லா, மாகாண சபை உறுப்பினரின் இணைப்பு செயலாளார் ஆசிரியர் ஐயூப்கன் மற்றும் ஈச்சநகர் கிராமிய அபிவிருத்தி சங்க தலைவர் நஹீம் உட்பட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர்....

திருகோணமலை மாவட்டத்தில் இருக்கின்ற பல விளையாட்டுக் கழகங்களுக்கு என்னாலான உதவிகளையும், நிதி ஒதிக்கீடுகளையும் மேற்கொண்டு வருகின்றேன். இளைஞர்களாகிய நீங்கள்தான் எம்நாட்டின் முதுகெழும்புகள் விளையாட்டுத்துறையில் தாங்கள் ஆற்றப்பட வேண்டிய துறைகள் நிறையவே காணப்படுகின்றன. 

அந்த வகையில் இவ்உதைப்பந்தாட்ட விளையாட்டுக்கழகத்திற்கு தன்னாலான நிதி ஒதிக்கீடு ஒன்றினை மேற்கொண்டு இன்று இச்சீருடையினை பெற்றுக்கொடுத்துள்ளேன். எதிர்காலத்திலும் தன்னலான உதவிகளை எம்பிரதேசத்திலுள்ள விளையாட்டுக்கழகங்கள் அனைத்திற்கும் பெற்றுக்கொடுக்க தன்னலான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -