மகிந்த அரசாங்கத்தின் மொத்த கடனையும் நாடு செலுத்த வேண்டியுள்ளது - கபீர் ஹசீம்

கிந்த ராஜபக்ச அரசாங்கம் பெற்ற 847500 கோடி ரூபா மொத்த கடனை நாடு செலுத்த வேண்டியேற்பட்டுள்ளதாக அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.

வைபவம் ஒன்றில் இன்று -06- உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். 

அரச நிறுவனங்கள் தொடர்பான அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் மாத்திரம் ஆயிரத்து 142 பில்லியன் கடனை செலுத்த வேண்டியுள்ளது.

கடந்த வருடம் அரசாங்கம் 100 பில்லியனை செலுத்தியது. மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி கொண்டு, கடந்த அரசாங்கம் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது.

எனது அமைச்சின் கீழ் வரும் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு 933 பில்லியன் டொலர் நஷ்டத்தில் இயங்குகிறது.

இந்த நிறுவனத்தை முன்னாள் ஜனாதிபதியின் மைத்துனர் நிர்வகித்து வந்தார். பஸ் ஒன்று ஓடுவது போலே ஸ்ரீலங்கன் விமான சேவை நடத்தப்பட்டது.

2008 ஆம் ஆண்டில் எந்த கடனும் இல்லாது இருந்த ஸ்ரீலங்கன் விமான சேவை 2015 ஆம் ஆண்டில் 933 பில்லியன் டொலர் கடனாளியானது.

நிறுவனத்தின் சொத்துக்களை விட கடன் சுமை அதிகம். ஸ்ரீலங்கன் விமான சேவை ஒன்றுக்கும் உதவாத நிறுவனமாக மாற்றி விட்டனர் என கபீர் ஹசீம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -