எஸ்.எம்.சன்சீர்-
சீகிரிய – சியம்பலாவெவ – திகம்பதன பிரதேசத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணொருவர் பிரசவித்த சிசுவை கழிவறை குழிக்குள் எறிந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சிசு கழிப்பறை குழிக்குள் எறியப்பட்ட பின்னர், சிசுவின் தாய் மருத்துவமனையில் தங்கியுள்ளார்.
அவர் தற்போது காவற்துறையினரின் பாதுகாப்புக்கு மத்தியில் தம்புள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பில் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் நேற்றைய தினம் காவற்துறையினருக்கு அறிவித்ததையடுத்து அதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.