வெளிநாடு செல்கின்ற பெண் பிள்ளைகளை தடுப்பதற்காக ஆடை தொழிற்சாலைநிறுவிய நபர்

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-

 வெளிநாடு செல்கின்ற பெண் பிள்ளைகளை தடுப்பதற்காக காத்தான்குடியில் ஆடை தொழிற்சாலையினை நிறுவியுள்ள சஹாப்தீன்..

வீடியோ:- நேர்காணலும் தொழிற்சாலை பற்றிய காணொளியும்:- லழரவரடிந.உழஅஃறயவஉh?எஸ்ரீனடளுகஆபுஙவஒவறரூகநயவரசநஸ்ரீலழரவர.டிந

1990 ஆண்டு காலப்பகுதியில் யுத்த சூழ் நிலைகளினால் பாதிக்கப்பட்டு பல கஸ்டங்களுக்கு மத்தியில் சவுதி அராபியாவில் உள்ள கட்டுமான கம்பனிக்கு வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றிருந்தார் மட்டக்களப்பு காத்தான்குடியினை சேர்ந்த சஹாப்தீன். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சவூதி அராபியாவில் சஹாப்தீன் கொழும்பினை சேர்ந்த நன்பருடன் தனது காரிலே பயணித்து கொண்டிருந்த வேலையில் அவருடைய காருக்கு முன்னால் சில நம் நாட்டு பெண்மனிகள் பொலிசாரினால் துரத்தப்பட்டு பல அசெளகரியங்களுக்கு மத்தியில் வீதியில் அல்லோலப்பட்டு கொண்டிருந்த நிலையில் கொழும்பினை சேர்ந்த சஹாப்தீனுடைய நன்பர் குறித்த அப்பெண்மனிகள் கிழக்கு மாகாணத்தினை சேர்ந்தவர்கள் என பதிலளித்துள்ளார். இந்த நிலையில் தனது சொந்த மாகாண பெண்பனிகள் வெளி நாடுகளுக்கு வேலை வாய்பிற்காக சென்று அங்கு எதிர் நோக்குகின்ற பிரச்சனைகளைப் பற்றி சிந்திக்க தொடங்கிய சஹாப்தீன் இறுதியில் நாம் ஏன் இவர்களுக்காக நம் நாட்டிலேயே வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க முடியாது என்ற தூர நோக்கு சமூக சிந்தனையின் பலனாக காதான்குடியிலே பெண் பிள்ளைகளுக்காக முற்றிலும் இலவசமான முறையில் தனது சொந்த நிதியினை செலவு செய்து தையல் பயிற்சி நிலையம் ஒன்றினை ஆரம்பித்தார்.

காலப்போக்கிலே தையல் பயிற்சியினை முடித்து வெளியேறிய பெண்பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்புக்களை தேடிக்கொள்வது கடிணமான விடயமாக காணப்பட்டதனால் மீண்டும் சிந்திக்க தொடங்கிய சஹாப்தீன் ஆண்களுக்கான பெனியன்களை தயாரிக்கும் ஆடை தொழிற்சாலையினை குறித்த காத்தான்குடி பிரதேசத்தில் நிறுவி தையல் பயிற்சி நெறியினை முடித்து வேலையில்லாமல் வீட்டிலிருக்கும் பெண் பிள்ளைகளுக்கு தொழிவாய்ப்பினை பெற்றுக்கொடுத்தார்.

வெளிநாடுகளில் வேலை வாய்ப்பிற்காக செல்லுகின்ற எமது பெண்பிள்ளைகள் எதிர் நோக்குகின்ற பிரச்சனைகளை நேரடியாக கண்டதன் விளைவாகவே உயரிய சமூக நோக்கத்தின் அடிப்படையில் காத்தான்குடி சாஹாப்தீனினால் உறுவாக்கப்பட்ட சுபுகு எனப்படும் சுஐகுமுயு புயுசுஆநுNவுளு குயுஊவுழுசுலு எனும் ஆடை தொழிற்சாலையானது இன்று அகில இலங்கை ரீதியில் தனது உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தி வருவதுடன் ஏனைய கம்பனிகளின் உற்பத்தி பொருட்களுக்கு போட்டியுடையதான முக்கிய உற்பத்தி பொருளாகவும் மாறிவருகின்றமை சஹாப்தீனின் தூர நோக்கு சமூக சிந்தனைக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகின்றது.

மேலும் இவ்விடயம் சம்பந்தமாக குறித்த ஆடை தொழிற்சாலைக்கு நேரடியாக சென்று சஹாப்தீனிடம் தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு சஹாப்தீனினால் வழங்கப்பட்ட பதில்கள் வருமாறு...

கேள்வி:- வியாபார துறையில் மிக முக்கிய புள்ளியாக வளர்ந்து வரும் நீங்கள் இந்த ஆடை தொழிற்சாலையினை சமூகப்பணியாக மேற்கொள்வதற்கான காரணம் என்ன?

சஹாப்தீன்:- 1990ம் ஆண்டு காலப்பகுதியில் வன்செயல்களினால் எனது பொருளாதரத்தினை இழந்து சவூதி அராபியாவிற்கு வேலை நிமிர்த்தம் சென்றிருந்த வேலையில் 2002ம் ஆண்டு என நினைக்கின்றேன் கொழும்பினை சேர்ந்த நன்பரும் கண்டியினை சேர்ந்த நன்பரும் எனது காரிலே சென்று கொண்டிருந்த வேலையில் ஜித்தாவிலே சரபியா எனுமிடத்தில் உள்ள பாலத்திற்கு அடியிலிருந்து இலங்கையினை சேர்ந்த பெண்மனிகள் ஓடி வந்து எங்களுடைய காருக்கு முன்னால் விழுந்தார்கள். இச்சம்பவமானது அந்த நாட்டினுடைய போலிசார் விரட்டியமையினாலே இடம்பெற்றதனை பின்பு அறியக் கூடியதாக இருந்தது. அப்பொழுது எனது பக்கத்தில் இருந்த கொழும்பை சேர்ந்த நன்பர் இப்படியான பெண்கள் கிழக்கு மாகாணத்தில் இருந்து வந்து எமது நாட்டினுடைய மானத்தினை காற்றில் பறக்க செய்கின்றார்கள் எனக்கூறிமையே என்னை முதலில் எமது கிழக்கு மாகாணத்திலுள்ள காத்தான்குடி பிரதேசத்தில் வாழுகின்ற பெண்மனிகளுக்கு இவ்வாறான முற்றிலும் இலவசமாக தையல் பயிற்சி நெறிகளை ஏற்படுத்திகொடுத்து பின் அவர்களுக்கான வேலைவாய்ப்பிற்காக இந்த ஆடை தொழிற்சாலையினை உறுவாக்கி அவர்களுக்குறிய வாழ்வாதார பிரச்சனைக்கு ஒரு தீர்வாக இத் தொழிற்சாலையினை அல்லாஹ்வின் உதவியினால் முன்னெடுக்க என்னை தூண்டியது.

கேள்வி :- சமூக பணி என்ற ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட இத்தொழிற்சாலையானது எதிர்காலத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

சஹாப்தீன்:- இத்தொழிற்சாலையிலே முக்கியமாக ஆண்கள் அணியக் கூடிய பெனியன்களை உற்பத்தி செய்து வருகின்றோம். என்னுடைய ஒரே நோக்கம் தரமான பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதாகும். அதே போன்று எங்களுடைய தொழிற்சாலையில் பொருளாதரத்தில் கஸ்ட்டப்பட்ட நிலையில் வேலை செய்கின்ற பெண்மனிகளின் வாழ்க்கை தரம் உயர வேண்டும். இதுதான் என்னுடைய நோக்கமாக இருக்கின்றது. இங்கு நான் முக்கியமான விடயத்தினை கூறியாக வேண்டும் அதாவதுஇ நாடு பூரகாவும் உள்ள எங்களுடைய வியாபாரிகள் எங்களுடைய நோகத்தினை அறிந்து எங்களுடைய உற்பத்தி பொருட்களை சந்தைபடுத்தி வருகின்றார்கள். அதற்காக நான் வியாபாரிகளுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். அதே போன்று இந்த கம்பனியில் கிடைக்கின்ற வருமானத்தில் ஒரு பகுதியினை இங்கு பொருளாதரத்தில் கஸ்ட்டப்பட்ட நிலையில் வேலை செய்கின்ற பெண்மனிகளுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் நான் செயற்பட்டு கொண்டிருக்கின்றேன்.

கேள்வி :- நீங்கள் தாயரிக்கின்ற உக்களுடைய உற்பத்தி பொருட்கள் ஏனைய கம்பனிகளின் உற்பத்தி பொருட்களோடு ஒப்பிடுகின்ற பொழுது எந்த நிலையில் இருக்கின்றது.

சஹாப்தீன்:- ஆரம்பத்தில் எங்களுடைய பொருட்களை வாங்குவதற்கு தயங்கிய வியாபாரிகள் தற்பொழுது எங்களுடைய உற்பத்தி பொருட்களின் தரத்தினை கருத்தில் கொண்டு நாடு பூரகாவும் விற்பனை செய்ய தொடங்கிவிடார்கள். ஏனென்றால் எங்களுடைய உற்பத்தி பொருட்கள் முழுக்க முழுக்க நூறு விகிதம் பருத்தியினால் நெய்யப்பட்ட துணியினால் உற்பத்தி செய்யப்படுவதாகும். அத்தோடு நாங்கள் ஆரம்பத்தில் வியாபாரிகளுக்கு எங்களுடைய உற்பத்தி பொருட்களை பாவித்து பார்க்குமாறு இலவசமான முறையில் வழங்கியிருந்தோம். அந்த வகையிலே வியாபாரிகள் ஏனைய கம்பனிகளின் உற்பத்தி பொருட்களை விடவும் எங்களுடைய பொருட்கள் தரமானதாக இருந்த படியினால் எங்களுடைய உற்பத்தி பொருடகளை அதிகளவில் கொள்வனவு செய்து விற்பனை செய்து வருகின்றார்கள்.

கேள்வி :- சந்தை படுத்துகின்ற வேலையில் உங்களுடைய பொருளின் விலை ஏனைய கம்பனிகளின் உற்பத்தி பொருட்களோடு ஒப்பிடுகின்ற பொழுது எவ்வாறு காணப்படுகின்றது?

சஹாப்தீன்:- அன்னளவாக ஏனைய கம்பனிகளின் உற்பத்தி பொருடகளின் விலையோடு ஒத்ததாகவே எங்களுடைய உற்பத்தி பொருட்களின் விலையும் காணப்படுகின்றது. ஆனால் நாங்கள் எங்களுடைய உற்பத்தி பொருளின் தரத்தினை உயர்மட்டத்தில் வைத்திருப்பதிலே அதிக கவனம் செலுத்தி வருகின்றோம்.

கேள்வி :- உங்களுடைய உற்பத்தி பொருளினை கிழக்கு மகாணத்தினை மட்டும் மையப்படுத்தி சந்தை படுத்துகின்றீர்களா? அல்லது இலங்கை பூராகவும் நுகரப்பட வேண்டும் என நினைக்கின்றீர்களா?

சஹாப்தீன்:- எங்களுடைய தனிப்பட்ட சந்தைபடுத்தல் முயற்சியினால் நாடு புராகவும் 200க்கு மேற்பட்ட கடைகளில் எங்களுடைய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இன்னும் எங்களுடைய விற்பனையினை அதிகரிப்பதற்காக சில ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்துவத்ற்கு முயற்சி செய்து வருகின்றோம். அதே போன்று எக்களுடைய இணையத்தளமான றறற.சபக.டம என்ற இணைய முகவரி ஊடகவும் விளம்பரப்படுத்தி வருகின்றோம்.

கேள்வி :- ஒரு சமூக நோகத்திற்காக ஆரம்பித்த இக்கம்பனியினை ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்த வேண்டும் என தற்பொழுது நினைப்பதற்கான காரணம் என்ன?

சஹாப்தீன்:- நான் இக்கம்பனியினை வைத்து இலாபம் உழைக்க வேண்டும் என்பதற்காக இதனை முன்னெடுத்து வரவில்லை. எல்லாவற்றுக்கும் அல்லாஹ் நன்கறிந்தவனாக இருகின்றான். இதனை நான் ஒரு சேவையாகத்தான் செய்து வருகின்றேன். நான் பல வருடங்களாக சவூதி அராபியாவிலே வாழ்ந்து வருகின்றேன். அங்கே எனக்கு சொந்தமாக கம்பனி இருக்கின்றது. அதில் கிடைகின்ற வருமானம் எனக்கு போதுமானதாகும். நான் ஒரு காலத்தில் எனக்கு கிடைக்கின்ற இலாபத்தில் மூன்றில் ஒரு பங்கினை இப்படியான சேவைகளுக்கு செலவழித்து வந்தேன். அதாவது மீனை பிடித்து கொடுப்பவனாக இருக்காதே மீனை எப்படி பிடிப்பது என்று கற்றுக்கொடுப்பவனாக இரு என ஜப்பான் நாட்டு மக்கள் கூறுவார்கள்.

அதே போன்று எங்களுடைய திறமையான வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்பிள்ளைகளுக்கு இலவசமான முறையில் இப்படியான செயற்திட்டங்களை எமது சமூகத்திலுள்ள தவந்தர்கள் வழியமைத்து கொடுத்தால் வெளி நாடுகளுக்கு கால் எடுத்து வைக்காமல் எமது பெண்மனிகள் அவர்களுடைய வாழ்க்கைக்காக இந்த நாட்டிலே அவர்களால் ஏதாவது செய்து கொள்ளமுடியும் என நாங்கள் நம்புகின்றோம். அந்த வகைலிலேயே நாங்கள் மேலும் பல பெண்மனிகளுக்கு வேலைவாய்பினை நாடுதளுவிய ரீதியில் பெற்றுக்கொடுக்கும் பொருட்டு எங்களுடைய கம்பனி உற்பத்தி பொருட்களை ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்த முயற்சிக்கின்றோம். இன்ஸா அல்லாஹ் நாங்கள் அதில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -