கிண்ணியாவில் பாடசாலை மாணவர்களுக்கு யானைக்கால் பரிசோதனை...!

எப்.முபாரக்-
யானைக்கால் நோய் தொடர்பான மருத்துவப் பரிசோதனை நடவடிக்கையை திருகோணமலை மாவட்டத்தில் றுகுணு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட ஒட்டுண்ணியல்த்துறை ஆய்வுக்கிளை முன்னெடுத்துள்ளது.

முதற்கட்டமாக சனிக்கிழமை (05) கிண்ணியாப் பிரதேசத்திலுள்ள முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம் நான்கு, ஐந்தில் கல்வி கற்கும் 320 மாணவர்களின் சிறுநீர் பெறப்பட்டுள்ளது.

றுகுணு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட ஒட்டுண்ணியல்த்துறை விரிவுரையாளர் ஜானக்க ரூபன் இது தொடர்பில் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் இந்த மருத்துவப் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.

யானைக்கால் நோய் தொற்று இல்லை என்பது தொடர்பிலோ, குறைவாக உள்ளதா அல்லது தொற்றக்கூடிய வாய்ப்பு உள்ளதா என்பது தொடர்பில் முன்கூட்டி அறிவதே இந்த மருத்துவப் பரிசோதனையின் நோக்கமாகும்.

காலி மாவட்டத்திலும்; முதற்தடவையாக இந்த மருத்துப் பரிசோதனையை முன்னெடுத்து அங்கு யானைக்கால் நோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு இல்லை என்பதை கண்டறிந்ததாகும் என தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -