ஜனாதிபதி திறக்கவிருக்கும் ஏறாவூர் தொழிற்சாலைக்கு முன், பெண்களை படம் எடுத்து நின்றவர் கைது...!


ட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் நாளை வெள்ளிக்கிழமை ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு முன்பாக நின்று கொண்டு இளம் பெண்களை தனது அலைபேசியில் படம் எடுத்துக்கொண்ட நின்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் இன்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆடைத் தொழிற்சாலையில் பணி புரிவதற்காகவும் ஆடைத் தொழிற்சாலைத் திறப்பு விழா ஏற்பாடுகளுக்காகவும் வந்த இளம் பெண்களை தனது அலைபேசியில் இந்தச் சந்தேக நபர் படம் எடுத்துக் கொண்டு நின்றுள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதி வருவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக ஏற்கெனவே அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட உத்தியோகஸ்தர்கள் இதை அவதானித்துச் சந்தேக நபரைக் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது அலைபேசியைப் சோதித்த போது, பல்வேறு கோணங்களில் பெண்கள் படம் பிடிக்கப்பட்டுள்ளதுடன், அதில் நீல மற்றும் நிர்வாணப் படங்களும் காணப்பட்டதாக தெரிவித்தனர்.

இச்சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -