இந்திய-இலங்கை எட்கா ஒப்பந்தம் வேண்டாம்- மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்













பழுலுல்லாஹ் பர்ஹான்-

லங்கையின் இலவச சுகாதார சேவையை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம் இன்று 29 செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்திய-இலங்கை (நுவுஊயு ) எட்கா வர்த்தக ஒப்பந்தம் வேண்டாம் ,மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி வேண்டாம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே மேற்படி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தின் திருகோனாமலை,அம்பாறை மட்டக்களப்பு ஆகிய அரச மருத்துவர்கள்,பல் வைத்திய நிபணர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த குறித்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் வைத்திய அதிகாரி கு. சுகுணன், பல நூற்றுக் கணக்கான தமிழ்,முஸ்லிம்,சிங்கள் வைத்தியர்கள்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்க பிரதிநிதிகள், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் இந்திய-இலங்கை (நுவுஊயு ) எட்கா வர்த்தக ஒப்பந்தம் வேண்டாம் ,மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி வேண்டாம் ,எதிர்கால சந்ததியினருக்கு வேலைவாய்ப்புகளை இல்லாது செய்யும் பொருளாதார சமூக மற்றும் கலாசார ரீதியில் தங்கிவாழும் நிலைக்கு நாட்டை இட்டுச் செல்லும் எட்கா வேண்டாம், எட்காவை உடன் நிறுத்து,சீஸ்டம் (மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி)வேண்டாம்,எட்காவை மீள்பரிசீலனை செய்,நோயாளிகளின் உயிர்களை பணத்திற்காக விற்க வேண்டாம் போன்ற பல்வேறு தமிழ்,சிங்கள,ஆங்கில பதாதைகளை ஏந்தி கோஷமிட்டவாரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்பாட்டம் இடம்பெற்ற பகுதிகளில் சிறிது நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன் பொலிசார் மற்றும் போக்குவரத்து பொலிசார் ஆகியோர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வாகன நெரிசலை குறைத்தனர்.

இவ் ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை புறு;று நோய்ப் பிரிவுக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டு மட்டக்களப்பு காந்திப் பூங்காவுக்கு முன்னாலுள்ள மணிக்கூட்டு கோபுரம் வரை சென்றடைந்து மீண்டும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -