திருகோணமலை: மாணவர்களும் பெற்றோர்களும் இணைந்து மூன்று நாட்கள் நடைபெற்ற பகிஸ்கரிப்பு முடிவு...!

எப்.முபாரக்-
திருகோணமலை குச்சவெளி அந்நூரிய்யா முஸ்லீம் மகா வித்தியாலயம், குச்சவெளி கனிஸ்ட வித்தியாலயம், குச்சவெளி இலந்தைக்குளம் வித்தியாலயம் ஆகியவற்றின் ஆசிரியர்களின் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து தருமாறு கோரி மாணவர்களும் பெற்றோர்களும் இணைந்து கடந்த செவ்வாய் கிழமையிலிருந்து (8) தொடர்ச்சியாக மூன்று நாட்களாக கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் பகிஸ்கரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று வியாழக்கிழமை (9) முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினறும், சட்டத்தரணியுமான ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார். 

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹிரின் தலைமையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அசங்க அபேவர்த்தன, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம்.நிசாம் மற்றும் திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் விஜேந்திரன் ,திருகோணமலை பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி எதிரிமான, குச்சவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார ஆகியோருக்கும் மூன்று பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் பழைய மாணவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று வியாழக்கிழமை (10) நடைபெற்ற போது எதிர்வரும் புதன்கிழமை (16) க் கிடையில் நிவர்த்தி செய்து தருவதாகவும், குறித்த பாடசாலைகளின் மூன்று பாடசாலைகளின் அபிவிருத்தி மற்றும் ஆசிரியர் பற்றாக்குறையினை தாம் நிவர்த்தி செய்து தருவதாக கூறி இரு சாராரும் உடன்பட்டுக் கொண்டதால் கற்றல் பகிஸ்கரிப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் அசங்க அபேவர்த்தன கூறியதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -