தமிழ் மாமன்றத்தின் ‘விளை நிலம்’ அழைப்பிதழ்..!

லை இலக்கிய துறையில் காத்திரமான பங்களிப்பை ஆற்றி வருகின்ற தமிழ் மாமன்றம், இன்னொரு முயற்சியாக, ‘ஆற்றலுக்கும் ஆளுமைக்குமான களம்’ என்ற தொனிப்பொருளில் “விளை நிலம்” என்கின்ற ஓர் தொடர் நிகழ்வை நடாத்த உத்தேசித்துள்ளது.

கலை இலக்கிய ரீதியில் ஆர்வமுள்ள, திறமையுள்ளவர்களுக்கான சரியான களத்தை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம், அவர்களின் திறமைகளுக்கான அங்கீகாரத்தை வழங்குவதுடன், அவர்களின் திறமைகளை மேலும் மெருகேற்றி, அத் துறைசார் ரீதியில் அவர்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நல் நோக்கத்தின் அடிப்படையில், இந் நிகழ்வினை தமிழ் மாமன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

‘விளை நிலம்’ எனும் இந்நிகழ்வின் முதலாவது களம் எதிர்வரும் 13.03.2016, ஞாயிற்றுக்கிழமை, மாலை 3.00 மணிக்கு வவுனியா பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வில், ‘போருக்கு பின்னரான தமிழரின் செல்நெறியில் பெரிதும் ஆதிக்கம் செலுத்தும் விடயப்பரப்பு எது?’ என்ற தலைப்பிலான தமிழ் மாமன்றத்தின் மேற்சபை உறுப்பினர் திரு. இரா. இராஜேஸ்வரன் அவர்கள் தலைமையிலான சுழலும் சொற்போர் இடம்பெறவுள்ளது. இவ் சுழலும் சொற்போரில், ‘பொருளாதார மீள் எழுச்சி’ என க.அனுஷா அவர்களும், ‘அதிகரித்துவரும் குற்றங்களும் சீர்கேடும்’ என சி.விதுர்சன் அவர்களும், ‘புலம்பெயர்ந்தவர்களின் சிந்தனை மாற்றம்’ என கு.சிரஞ்சீதன் அவர்களும், ‘தமிழ் அரசியல் தலைமைகளின் போக்கு’ என சு.வினோத் அவர்களும், ‘சுயநிர்ணயம் மீதான நம்பிக்கையீனம்’ என கி.கிஷாந் அவர்களும் வாதிடவுள்ளனர்.

அத்துடன், ‘கால ஓட்டத்தில் கரையாத சுவடுகள்’ எனும் பொருளில், தமிழ் மாமன்றத்தி;ன் மேற்சபை உறுப்பினர், திரு.செ.மதுரகன் தலைமையிலான கவியரங்கமும் இடம் பெறவுள்ளது. இக் கவியரங்கில், ‘ஏழ்மையின் கல்வி’ என ஜெ.கோபிநாத் அவர்களும், ‘வீரர்தம் விழுப்புண்’ என த. மோகனரங்கன் அவர்களும், ‘இணையத்தில் எழுத்துக்கள்’ என ச.கஜன் அவர்களும், ‘கவிஞனின் வார்த்தைகள்’ என வே.முல்லைதீபன் அவர்களும் கவி புனையவுள்ளனர்.

மேலும், தமிழ் மாமன்றம் வாசிக்கும் ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில், தொடர்ச்சியாக நடாத்தி வருகின்ற வாசிப்பும் அனுபவப்பகிர்வும் - நூலக நிகழ்வினுடைய 7வது நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இந் நிகழ்வில், போராசிரியர் சிவத்தம்பி நினைவு ஆவணப்பட விருது 2014 கிடைக்கப்பெற்ற, மொரட்டுவை பல்கழைக்கழக பொறியியல் பீட மாணவன், மோகனரங்கன் தயாபரன் அவர்கள் இயக்கிய, “TEARS OF BLOOD” எனும் ஆவணப்படம் காட்சிப்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவிருக்கின்ற ‘விளை நிலம்’ மற்றும் ‘வாசிப்பும் அனுபவப்பகிர்வும்’ எனும் நிகழ்வுகளில் கலை இலக்கிய துறைசார் ஆர்வலர்கள் அனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தமிழ் மாமன்றம் அழைக்கின்றது.

‘தமிழால் வையகத்தலைமை கொள்வோம்’



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -