நாடு தற்பொழுது முகம்கொடுத்துள்ள பொருளாதார மற்றும் பாதுகாப்பு ரீதியிலான ஆபத்துகளிலிருந்து நாட்டை பாதுகாக்க முடியாவிட்டால் உடனே பதவியை துறந்து நல்லாட்சி அரசாங்கம் வீட்டிற்கு செல்ல வேண்டும். இல்லாவிட்டால் நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என கூட்டு எதிர்க் கட்சி அறிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற கூட்டு எதிர்க் கட்சியின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட எதிரணியின் பிரதிநிதிகளே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இதன் போது கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண;
பொருளாதார ரீதியில் அரசாங்கம் படுமோசமான நிலையில் உள்ளது. வரலாறு காணாத அளவிற்கு நாட்டில் பணவீக்கம் ஏற்பட்டு ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிகண்டுள்ளது.
அத்துடன் மின் வெட்டில் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ள முடியாமல் அரசாங்கம் தவிக்கின்றது. ஆனால் ஒன்றுமே நடைபெறாதது போன்று பொது மக்களுக்கு போலியான விடயங்களை கூறி பிரச்சினைகளை திசை திருப்பி வருகின்றது என அவர் குறிப்பிட்டார்.