எப்போது முசலிக்கு சி.ரீ.பி டிப்போ கிடைக்கும் - அமைச்சர் றிசாத்திடம் வேண்டுகோள்

முசலியூர் கே.சி.எம்.அஸ்ஹர்-
முசலிப்பிரதேசத்திற்கு தனியான இலங்கை போக்குவரத்து சபையின் உப பிராந்திய டிப்போ தேவையாக உள்ளது. இப்பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கு இது ஒரு நிரந்தரத்தீர்வாக இருக்கும். புத்தளத்தில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் மீள்குடியேற்றத்திற்கும் இது ஒரு உந்து சக்தியாக இருக்கும்.

முருங்கனில் வந்து இறங்கும் முசலிப்பிரதேச மக்கள் மணித்தியாலக் கணக்கில் காத்துக்கிடக்கின்றனர். இப்பிரச்சினை வருடக்கணக்கில் தொடர்கிறது. சிலாவத்துறை முருங்கன் வீதியிலுள்ள பேய்ப்பள்ளம் எனும் இடத்தில் டிப்போவுக்காக காணி ஒதுக்கப்பட்டுள்ளது. போடப்பட்ட பெயர்ப்பலகையும் கம்பீரமாக காட்சி தருகிறது.

ஸ்ரீ.மு.கா எம்.பி இப்பிரதேசத்தில் இருந்தார். போக்குவரத்துப் பிரதியமைச்சராக எம்.எஸ்.தௌபீக் இருந்தும் இவ்விடயத்தை திரும்பியும்; பார்க்கவில்லை. இவ்விடயத்தில் வன்னிப்பிரதேச மக்களிடம் அதிக அக்கறைகொண்ட அமைச்சர் றிசாத் பதியுதீன்; அவர்கள் போக்குவரத்தமைச்சர் நிமால் சிறிபாலாவுடன் தொடர்பு கொண்டு விரைவாக முசலி டிப்போவைப் பெற்றுத்தருமாறு முசலி ஜீனியஸ் வேண்டுகோள் விடுக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -