தெமட்டகொட சமிந்த மீதான துப்பாக்கி பிரயோகம் குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மீது சந்தேகம்..!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லச்மன் பிரேமசந்திரவின் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாதாள உலக உறுப்பினர் தெமட்டகொட சமிந்த மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோக சம்பவம் குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

இது சந்தேகம் குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

தெமட்டகொட சமிந்த, கடந்த வாரம் சிறைச்சாலை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட வேளையில் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அவர் கடும் காயங்களுக்கு உள்ளானார்.

தெமட்டகொட சமிந்தவை அரசதரப்பு சாட்சியாக பயன்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையிலேயே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இது தொடர்பில் எவ்வித தகவல்களும் தம்மிடம் இல்லையென்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -