நிஸ்மி-
சிலிங்கோ காப்புறுதி நிறுவனத்தின் அக்கரைப்பற்றுக் கிளையில் ஆயுள் காப்புறுதி செய்தவர்களின் பிரதி நிதிகளுக்கு ஆயுள் காப்புறுதிக்கான இழப்பீடடுக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (04) இடம் பெற்றது.
சிலிங்கோ காப்புறுதி நிறுவனத்தின் அக்கரைப்பற்றுக் கிளை முகாமையாளர் ஆர்.சுதர்ஷன் தலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிலிங்கோ காப்புறுதி நிறுவனத்தின் வலய முகாமையாளர் ரி.சிவகுமாரன் கலந்து கொண்டு ஆயுள் காப்புறுதி இழப்பீட்டுக் கொடுப்பனவை வழங்கி வைத்தார்.
இதன்போது ஆயுள் காப்புறுதி செய்திருந்த பொத்துவிலைச் சேர்ந்த முத்து பண்டா விஜய சேகர மாரடைப்பினால் காலமானதனால் அவரால் தனது பின்னுறுத்தாளியாகக் குறிப்பிட்டிருந்த அவரின் சகோதரி முத்து பண்டா விஜித சுரேகாவிற்கு பனிரெண்டு லெட்சத்தி எண்பதாயிரம் ரூபாவிற்கான காசோலையை வலய முகாமையாளர் ரி.சிவகுமாரன் வழங்கி வைத்தார்.
நிகழ்வில் சிலிங்கோ காப்புறுதி நிறுவனத்தின் கணக்காளர் ஏ.எம்.அப்துல் மனாப், விற்பனை நிறைவேற்று உத்தியோகத்தர் ஏ.ஜெயராஜ் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.