முன்னாள் உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ணபாலவின் மறைவுக்கு மு.கா. வின் மூத்த பொதுச் செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் அவர்களின் அனுதாபச் செய்தி
அண்மையில் மறைந்த முன்னாள் உயர்கல்வி அமைச்சராக திருமதி. சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சியில் இருந்த பேராசிரியர் விஸ்வ வர்ணபால அவர்கள் அன்று ஒலுவிலுக்கு விஜயம் செய்து இப்போதுள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகம் அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டு அரசுக்கு சமர்ப்பித்த சாரபான அறிக்கையின் மூலம்தான் இப்பல்கலைக்கழகம் பலத்த இழுபறிகளுக்கு மத்தியில் இங்கு நிறுவப்பட்டது.
எமது மறைந்த மாமனிதரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களுடன் அன்னாரின் அமைச்சில் அந்நாட்களில் இணைப்பாளராக கடமைபுரிந்த மு.காவின் ஸ்தாபக பொதுச் செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர், ஏ.சீ.எம். புகாரி மௌலவி, மறைந்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அசித்த பெரேரா சகிதம் அமைச்சர் வர்ணபாலாவுடன் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளும் குறித்த இவ்விடத்தை அகோர வெயிலையும் வியர்வையும் பொருட்படுத்தாது மிக நீண்ட தூரம் காலநடையாகச் சென்று பார்வையிட்டபோது பிடிக்கப்பட்ட அன்றைய புகைப்படத்தினை இன்றையவர்கள் பார்க்கவும்.
அதன் பின்புதான் அரசாங்கத்திற்கு இப்போதைய பல்கலைக்கழகம் அமைப்பதற்கு அன்று அவர் செய்த சிபாரிசின் மூலம்தான் இன்றுள்ள தென்கிழக்குப் பலகலைக் கழகம் அதிநவீன பல கட்டடங்களைக் கொண்டு இப்பகுதியில் எமக்காக ஒரு உயர் கல்வி நிறுவனமாக கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது. இப் பல்கலைக்கழகத்தின் பலன்களையும், பயன்களையும் நாடுபூராகவுமுள்ள பல இன மக்களும் பகிர்ந்து படித்துப் பட்டம் பெறுகின்றார்கள்.
அவ்வாறு அன்று பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் எம் மறைந்த தலைவரை மதித்து இதற்கு உதவியும் ஒத்தாசையும் புரிந்த ஒரு நல்ல மனிதர் இன்று எம்மை விட்டும் மறைந்துவிட்டார்.
அவரின் சேவையை நமது சமூகம் மிக நன்றியுடன் நினைவகூர்ந்து அன்னாரின் மறைவுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றது என முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் அரசியல் விவகார பணிப்பாளருமான சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள் அவரது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறுதான் கடந்த காலங்களில் 'காங்கிரஸ் கட்சியையும்' கன்டுபிடித்து அதனை கட்டி பாதுகாத்து நாம் கடந்தும் நடந்தும் வந்த அந்த கரடுமுரடான பழைய பல பாதைகளில் பவளமாக படிந்ததுதான் எமது 'பாதங்கள்' என்பதை இச் சந்தர்ப்பத்திலாவது எல்லோருக்கும் நினைவூட்ட விரும்புகின்றோம்.