பாறுக் ஷிஹான்-
மன்னார் மாவட்ட விளையாட்டுக் கழகங்களை ஊக்குவிக்குமுகமாக அங்குள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வடமாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினருமான எச்.எம். றயீஸ் வழங்கியுள்ளார்.
மாகாண சபை உறுப்பினரின் பிரமாண அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டின் கீழ் மன்னார் மாவட்டத்தில் உள்ள பின் தங்கிய விளையாட்டுக்கழகங்களினை ஊக்குவிக்கும் முகமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள விளையாட்டுக்கழகங்களுக்கு வழங்குவதற்கு கொள்வனவு செய்யப்பட்ட விளையாட்டு உபகரணங்களை மன்னார்; முசலி நானாட்டான் மாந்தைமேற்கு பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கு மாகாண சபை உறுப்பினரின் மாவட்ட அலுவலகத்தில் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் திணைக்கள அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும்; ஆதரவாளர்கள் என பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர்.