குளியாப்பிட்டி சிறுவனின் குருதியை தன் உடலில் செலுத்த தயாராகும் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க..!

டந்த சில தினங்களாக பெரும்பாலும் பேசப்பட்டு வரும் அநீதிக்கு உள்ளான குளியாப்பிட்டி சிறுவன் சம்பந்தமாகவும் எயிட்ஸ் நோய் தொடர்பாக மக்களுக்கு மாத்திரமல்லாது, அரசியல்வாதிகளின் மனங்களில் இருக்கும் தவறான எண்ணத்தை போக்க தான் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டி சிறுவனுக்கு எயிட்ஸ் நோய் இல்லை என்பதை காட்ட, சிறுவனிடம் இருந்து எடுக்கப்பட்ட குருதியை தான் தனது உடலில் செலுத்திக்கொள்ள போவதாகவும் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் எத்தனை பேருக்கு எயிட்ஸ் நோய் இருக்கின்றதோ என்பது யாருக்கும் தெரியாது. அப்படி எவராது கண்டுபிடிக்கப்பட்டால், நாடாளுமன்றத்தில் இருந்து விரட்டி விடுவார்களா எனவும் பிரதியமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இப்படியான மாயைகளுக்கு ஏமாற முடியாது. எயிட்ஸ் நோய் காற்று மற்றும் எச்சில் மூலம் பரவாது. அது பற்றி நான் படித்திருக்கின்றேன்.

குறித்த சிறுவனுக்கு எச்.ஐ.வி. தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் சிறந்த பாடசாலையில் கற்கும் வாய்ப்பு சிறுவனுக்கு வழங்கப்படும் எனவும் அவரது தாய்க்கு வீடு ஒன்றும் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாகவும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -