அரசர் இராவணரை தேடி சென்ற சம்பவம்:தொடரும் மர்மம் -

ராவணா எல்லை பிரதேசத்தில் கரந்தகொல்ல கிராமத்தில் அமைந்துள்ள கற்குகைக்கு அரசர் இராவணர் இன்று வருமாறு கனவில் கூறியதாக அண்மையில் மொரட்டுவையில் இருந்து பண்டாரவளைக்கு வந்த குழுவொன்று தெரிவித்து.

ஒன்பது பேர் உள்ளடங்களான குறித்த குழு அண்மையில் குறித்த கற்குகைக்குள் அரசர் இராவணர் மயக்க நிலையில் உள்ளாதாக கூறி உடலை தேடி சென்றது.

குறித்த குழுவில் பெண் ஒருவரின் கனவில் அரசர் இராவணர் வந்து குறித்த இடத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக குறித்த பெண் தெரிவித்தார். கற்குகைகுள் சென்ற குழு பின்னர் வேறு ஒரு வழியாக வெறுங்கையுடன் வெளியேறியது.

பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து குறித்த பெண், பூமா தேவியின் தினமான வியாழக்கிழமை அதவாது இன்றைய தினம் வருவதாக தெரிவித்தார்.

அரசர் இராவணரின் உடலில் உள்ள விஷத்தை நீக்கி மூன்று தினங்களுக்கு பின்னர் சுய நினைவுக்கு கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார். எனினும் குறித்த குழு அங்கு வந்ததாக இதுவரை தகவல் இல்லை.
hirunews
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -