மைத்திரி பெயருக்கு பதிலாக மகிந்த பெயர் - கவலையில் மைத்திரி

வரவேற்புரையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என தெரிவித்த விவசாய அமைச்சின் செயலாளர் சிறிது நேரத்தின் பின்னர் சுயநினைவுக்கு வந்து தவறை ஏற்றுக் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரை நினைவுபடுத்தினார். 

ஜனாதிபதி செயலகமும், விவசாய அமைச்சும் இணைந்து கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடாத்தும் “நச்சுத்தன்மையற்ற விவசாயம் தார்மீக நாடு” என்ற தொனிப் பொருளினாலான கண்காட்சியின் இரண்டாம் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் வவிசாய அமைச்சின் செயலாளர் விஜேயரத்ன வரவேற்புரையாற்றினார். இதன் போது செயலாளர் ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேன எனத் தெரிவிப்பதற்கு பதிலாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை அன்புடன் வரவேற்பதாக அறிவித்தார்.

பின்னர் தனது தவறை உணர்ந்த செயலாளர் தனது தவறுக்கு கவலை தெரிவித்ததோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என திருத்தினார் வரவேற்புரையை.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -