விராட் கோலி டுவிட்டரில் ஆவேசம்...!

னுஷ்கா சர்மாவை விமர்சிப்பது வெட்கக்கேடானது, அவர் எனக்கு உத்வேகம்தான் அளித்துள்ளார் என்று விராட் கோலி ஆவேசமாக டுவிட் செய்துள்ளார்.

இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி 2 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்தார் என்பது அனைவரும் தெரிந்ததே.

2015 உலகக் கோப்பை கிரிக்கட்டில் 2-வது அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொண்டது. அப்போது களமிறங்கிய விராட் கோலியை, போட்டியை காணச் சென்ற அனுஷ்கா சர்மா கைதட்டி உற்சாகப்படுத்தினார். 

ஆனால், கோலியோ 13 ரன்களில் தேவையில்லாத ஷாட் அடித்து ஆட்டம் இழந்தார். இந்தியாவும் தோல்வி அடைந்து நடையை கட்டியது. இதனைத் தொடர்ந்து அனுஷ்கா ராசி இல்லாதவர் என்று கூறி அவரை டுவிட்டர், பேஸ்புக்கில் விமர்சித்தனர். 

விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஜோடியை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இதற்கிடையே அனுஷ்கா சர்மா உடனான விராட் கோலியின் காதலானது முடிவுக்கு வந்ததாக செய்தி வெளியாகியது.

இந்நிலையில் தற்போது உலகக் கோப்பை 20 ஓவர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் விராட் கோலி சிறப்பாக ஆடிவருகிறார். இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய அடித்தளமாகவும் இவர் திகழ்கிறார்.

இருப்பினும் அனுஷ்கா தொடர்பான விமர்சனங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் உலவுவது நின்றபாடில்லை. விராட் கோலியை திருப்பி எங்களிடம் தந்ததற்கு நன்றி, என அனுஷ்காவை விமர்சிக்கும் வண்ணம் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பரவ விடப்படுகிறது.

இச்செய்தி விராட் கோலியின் காதுக்கு எட்ட, தன்னுடைய ஆவேச பாணியிலே எல்லோருக்கும் பதில் அளித்து உள்ளார். 

இதுதொடர்பாக டுவிட்டரில் விராட் கோலி வெளியிட்டு உள்ள செய்தியில் “அனுஷ்கா சர்மாவை தேவையில்லாமல் மக்கள் விமர்சனம் செய்வது வெட்கக்கேடானது. அவர் (அனுஷ்கா சர்மா) எப்போதும் எனக்கு உத்வேகத்தையே கொடுத்து உள்ளார்.” என்று கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -